02/08/2017

கேஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் , பாராளுமன்றத்தில் மத்திய அரசு புது விளக்கம், அவர்கள் திட்டத்தை செயல்படுத்தவா மக்கள் உங்களை தேந்தெடுத்தார்கள், எதிர்கட்சிகள் கேள்வி...


கேஸ் விலையை மாதம் மாதம் 2 ரூபாயில் இருந்து 4 ரூபாய் உயர்த்தி கேஸ் மானித்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முற்றிலும் நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இது குறித்து எதிர்கட்சிகள் இன்று கேள்வி எழுப்பியதற்கு , ”இது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்” எனவும் , ”கேஸ் மானியத்தை யாருக்கு வழங்கலாம் யாருக்கு வழங்ககக் கூடாது” என மத்திய அரசு கேஸ் மானியத்தை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் புது விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் கேசிற்கு மானியம் வழங்குவதால் அரசிற்கு பெரும் செலவு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கேஸ் மானியம் உடனடியாக முற்றிலும் ரத்து செய்யப்படுமா பாடாத என அமைச்சர் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்கட்சியை சேர்ந்த சீத்தாராம் எச்சோரி (CPI-M), ஏழைகளுக்கு கொடுப்பதற்காக உங்கள் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என மோடி விளம்பரம் செய்தார் பலர் அதை நம்பி விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் மக்களை ஏமாற்றி தற்போது அந்த ஏழை மக்களுக்கு வழங்கிய சிலிண்டரின் விலையயை முற்றிலும் மானியம் இல்லாமல் உயர்த்துகின்றீர்கள் இது ஏமாற்று வேலை இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் , காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லையா என மத்திய அரசு விளக்கம் அளிக்கின்றது. காங்கிரஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏன் மக்களாகிய நாங்கள் உங்களை தேர்வு செய்ய வேண்டும் ? அதற்கு பதிலாக அவர்களே ஆட்சி நடத்தி விட்டு போயிருக்கலாமே நீங்கள் ஏன் ? அவர்கள் சரியில்லை என்பதால் தானே மக்களாகிய நாங்கள் உங்களை தேர்வு செய்தோம் உங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் யாருக்காக வேலை செய்கின்றீர்கள் முதலாளிகளுக்காகவா அல்லது உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்காகவா என சமூக வலைதளத்தில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கேஸ் விலை உயர்வு என்பது கேசோடு நின்று விடாது அதனால் உணவு பொருட்களின் விலை மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைவார்கள் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.