05/09/2017

நீட் என்ற அயோக்கியத்தனம் பற்றி இப்பொழுதுதான் மாணவர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. வழக்கம் போல் காவிகள் ஊடுருவி தங்கள் அஜெண்டாவை பரப்ப ஆரம்பிப்பார்கள், மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்...


அஜெண்டா 1.
     
நமது கல்வித்தரம் சரியில்லை, மாற்ற வேண்டும் என்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த கல்லூரிகளும், மருத்துவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள். நீங்க கொஞ்சம் மூடிகிட்டு போங்க என்று சொல்லவும். எங்க வரிப்பணத்தில் கட்டிய கல்லூரியில் யார் படிக்க தகுதியானவரகள் என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என்று சொல்லவும்.

அஜெண்டா 2.
     
மருத்துவம் இல்லையென்றால் வேறு படிப்பே இல்லையா என்பார்கள்.
     
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தும் எனக்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்லவும்.

அஜெண்டா 3.
     
நீட்டில் மூன்று சான்ஸ் இருக்கே என்று சொல்வார்கள்.
   
கோச்சிங் சென்டருக்கு லட்சக்கணக்கில் பணம் உங்கப்பனா கட்டுவான் என்று கேட்கவும்.

அஜெண்டா 4.
     
மற்ற எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக்கொண்டார்களே என்பார்கள்.
     
இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான், மற்ற மாநிலங்களில் வெகு குறைவு, நீட்டினால் மற்றவர்களுக்கு லாபம் நமக்கு நட்டம் என்று சொல்லுங்கள்.

அஜெண்டா 5.
       
85% நம் மாநில மாணவர்களுக்கு தானே, CBSEல் படித்தாலும் நம் மாணவர்கள் தானே என்பார்கள்.
   
இப்பொழுது நீட் மதிப்பெண்ணும் நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட்டும் இருந்தால் போதும். பலர் எளிதாக போலி சர்ட்டிபிகேட் வாங்க முடியும். ஏற்கனவே பல சீட்கள் திருடப்பட்டுவிட்டன.

அஜெண்ட்டா 6.
 
நீட் வந்தாலும் இட ஒதுக்கீடு அப்படியேதானே உள்ளது என்பார்கள்.
       
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான இடங்களை நீட் பெயாரால் ஏற்கனவே திருடிவிட்டார்கள், அருந்ததியருக்கு செல்ல வேண்டிய இடங்களும் பறிக்கப்படலாம்.

மருத்துவ உயர் படிப்பிற்கு ஏற்கனவே இட ஒதுக்கீட்டை முற்றிலும் நீக்கிவிட்டார்கள்.

அஜெண்டா 7.
   
இப்ப எல்லாம் யாரும் 11ஆம் வகுப்பு பாடங்களை படிப்பதில்லை,  நீட் வந்தால் படிப்பார்கள் என்பார்கள்.
   
நீட் வந்தால் எட்டாம் வகுப்பில் இருந்தே பலர் பள்ளி பாடங்களை படிக்க மாட்டார்கள், கோச்சிங் சென்ட்டர்தான் போவார்கள் என்று சொல்லுங்கள்.

அஜெண்டா 8.
   
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் என்பார்கள்.
   
நாமக்கல்லில் இருப்பது கோழிப்பண்ணை பள்ளிகள் என்றால் இராஜஸ்தான் கோட்டாவிலும், ஆந்திராவிலும் IITக்கு பெருமளவில் மாணவர்களை வதைத்து தயார் செய்யும் கோச்சிங் சென்டர்கள் என்ன அறிவியல் ஆராய்ச்சிக்கூடங்களா என்று கேளுங்கள்.

அஜெண்டா 9.
   
இப்ப எல்லாம் மனப்பாடம் செய்கிறார்கள் முட்டாள்கள் என்பார்கள்.

மனப்பாடம் செய்கிறவன் முட்டாள் என்றால் காலங்காலமா வேதங்களை மனப்பாடம் பண்ணவனையும் முட்டாள் என்று ஒத்துக்கொள்கிறாயா என்று கேளுங்கள்.

அஜெண்டா 10.
   
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொன்னீர்களே என்பார்கள்.
     
ஆரியத்தால் தாழ்ந்தோம்.. திராவிடத்தால் வீழ்ந்தோம்.. என்பது உண்மை தான். ஆனால் இனி தமிழர்கள் நாங்கள் இனைந்து உங்கள் இருவரையும் வெளுத்து விடுவோம் என்று சொல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.