05/09/2017

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?


கொடியங்குளம் ‘கலவரம்’, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது அரசியல் அரங்கிற்கு வந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி சென்றாலும் அவரால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளவுக்கு கூட சாதிக்க முடியவில்லை.

இறுதியாக ஆண்டையான ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் தஞ்சம் அடைந்து அடையாள அரசியல், இந்துத்துவ அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அதன் உச்சமாக அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பாஜக – அதிமுக கும்பலை காப்பாற்றும் அடியாட்பணியை மேற்கொண்டு வருகிறார்.

அனிதா ஏன் தற்கொலை செய்தாள், வேறு படிக்கலாமே, அவளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று வழக்காட வைத்தவர்களே தற்கொலைக்கு காரணம் என்று நாக்கூசாமல் பேசுகிறார். இணையம் முழுவதுமே தமிழக மக்கள் அவரை திட்டித் தீர்த்தாலும் கிருஷ்ணசாமி அவற்றை சட்டை செய்வதில்லை. அமித்ஷா மூலம் ஏதாவது மாநிலங்களவை உறுப்பினர், தமிழகத்தில் ஏதாவது ஒரு எம்பி, பிறகு அமைச்சர், ஐநா சபை உரை என்று கனவில் மிதக்கிறார்.

 தற்போது அவரது மகளது மருத்துவர் படிப்பிற்காக ஜெயாவிடம் சிபாரிசு செய்து இடம் வாங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த தகவல் குறித்த உண்மை நிலவரம் நமக்குத் தெரியாது என்றாலும் கிருஷ்ணசாமி அப்படி சீட் வாங்க கூடியவர் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர் நீட்-ஐ ஆதரிக்கிறார்.

இன்று அவர் சார்ந்த தேவேந்திர குலமக்களே அவரை காறி உமிழ்கின்றனர். முழு தமிழகமுமே நீட்டை எதிர்த்தும், மோடி – எடப்பாடி அரசுகளை கண்டித்தும் போராடி வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கிருஷ்ணசாமியை இறக்கி அவதூறுகளை வீசி வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.