10/09/2017

இந்த நீட் போராட்டத்துல, பொறியியல் மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை சைலண்டா நிறுத்திய அதிமுக...


பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக்கு குறைத்து அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 12.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை 4 லட்சம் ரூபாயாகவும், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 85 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டு வந்ததை, 70 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்து அநியாயமாகவும், அக்கிரமமாகவும் ஒரு அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறது.

 அநீதியான இந்த அரசு ஆணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின, கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி பெறும் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சமூகநீதிக் கொள்கை மீது மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கும் இந்த அரசு, எந்தப்பிரிவு மக்களையும் நிம்மதியாக வாழவிடுவது இல்லை என்று முடிவெடுத்து,  கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

இந்த நீட் போராட்டத்துல, பொறியியல் மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை சைலண்டா நிறுத்திட்ட அதிமுக கவர்ன்மெண்டை பாராட்டியே ஆகணும். மத்திய அரசு பல வருஷமா இந்தத் தொகையை நிறுத்த திட்டமிட்டு ஒரு வழியா அதிமுக மூலமா சாதிச்சிட்டாங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.