31/10/2017

கொரட்டூர் குடிநீர் ஏரியில் காவல்துறை பாதுகாப்புடன் கழிவுநீர் கலக்கும் தமிழக அரசு...


சாலையில் மழை நீர் தேங்குவதால் இந்த நடவடிக்கையாம்..

அப்போ மழைநீர் வடிகால் கட்ட செலவு செய்த பல கோடி பணம் என்ன ஆச்சு?

கழிவு நீர் சுத்திகரிப்புக்கு வருடாவருடம் செலவு செய்யும் பணம் என்ன ஆச்சு?

எந்த வேலையும் செய்யாத இந்த துறை அரசாங்க ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம்?

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி..

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் - மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் - பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் - நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் - நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் - பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் - உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் - நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் - நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் - ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் - கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் - வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் - முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

பாஜக எச். ராஜா சர்மா மீது எப்போது வழக்கு பதிவு செய்யும் காவல்துறை.?


தமிழகத்தில் மததுவேச கருத்துக்களை பரப்பி தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எச்ச ராஜஷர்மா மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீத்தேன் எதிர்ப்பு போராளி பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை  எடுப்பது வன்மையாக கண்டிக்கதக்கது - மக்கள்...

இந்தியா vs சிங்கப்பூர்...



சிங்கப்பூரில் குறைந்த பட்ச ஊதியம் ஒரு மாதத்திற்கு 1100 டாலர்...

ஆனால் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு வெறும் 75 முதல் 330 டாலர்கள் மட்டுமே...

அதாவது சிங்கப்பூரை விட நான்கு மடங்கு குறைந்த ஊதியம்.

மேலும் இவர் கூவும் சிங்கப்பூரில் ஜிஎஸ்டி அறிமுகமான போது வெறும் 3% இன்று அதிகபச்சமாக 7% .

ஆனால் இந்தியாவில் ஆரம்பமே 28% என்ற இமாலய வரி...

இந்த லட்சணத்தில் இவரு சிங்கப்பூரை கம்பேர் பண்ணுறாராம்....

வேலை வாய்ப்பின்மையின் மிக மோசமான அவலம் தான் இது...


ஆவிகள் பற்றிய அமானுசிய உண்மைகள்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்.. எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். 

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.  பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். 

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது.. எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். 

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது..

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல.. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) O + அல்லது O - ஆக இருக்கும்..

மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்...

ஜிஎஸ்டி யின் நவீன கொள்ளை...


வரி வரம்புக்குள் உட்படாத நிறுவனங்கள் நம்மிடம் வரி வசூலிக்கத் தகுதியுள்ளதா என்பதை, ஒரே நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம். அந்த நிறுவனம் அளிக்கும் பில்லில் GSTIN  எண், அதாவது ஜி.எஸ்.டி வரி விதிப்பதற்கான அனுமதி எண் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி அந்த பில்லில் அந்த எண் இல்லை என்றால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்றே அர்த்தம். ஒருவேளை அந்த பில்லில் ஜி.எஸ்.டி எண் இருந்தும் உங்களுக்குச் சந்தேகமா... கவலை வேண்டாம், www.gst.gov.in என்ற இணையதளத்தில் `Search Tax Payer' என க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும். அதில் உங்கள் பில்லில் உள்ள எண்ணைப் பதிவிடுங்கள் அப்படிப் பதிவிட்டவுடன்

நிறுவனத்தின் பதிவுப் பெயர்.
மாநிலம்
பதிவுத் தேதி
நிறுவனத்தின் வரி செலுத்தும் வகை
GST பதிவின் நிலை
போன்ற சில தகவல்கள் உங்களுக்குத் தெரியவரும்.

இந்தத் தகவலுடன் நிறுவனத்தின் பெயரோ அல்லது ஜி.எஸ்.டி எண் என அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணோ பொருந்திப்போகவில்லை என்றால், நீங்கள் வரி செலுத்தவேண்டிய அவசியமே இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். அந்த பில்லை உரிய ஆதாரமாகக்கொண்டு புகார் அளித்து இதுபோன்ற ஏமாற்றுப்பேர்வழிகளைக் களையலாம். 14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

ஏமாற்றும் நிறுவனத்திடம் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நீங்கள் மொபைலை எடுத்து ஆன் செய்தாலே சில நிறுவனங்கள் பயந்து, உண்மையை உடனே ஒப்புக்கொண்டு, உங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும். சில நிறுவனங்கள் எளிதில் ஒப்புக்கொள்ளாது.  அத்தகைய நிறுவனங்களிடம் நாமும் விடாப்பிடியாக வாதாடி, ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க வேண்டும்.

சாமானிய மக்கள் வரி கட்டுவது என்பதே மிகப்பெரிய விஷயம். அப்படிக் கட்டும் வரிகள் உரிய முறையில் சென்று சேராமல், அந்த நிறுவனமே எடுத்துக்கொள்வது என்பது வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் துரோகம் மட்டுமல்ல, சட்டரீதியிலான குற்றமும்கூட. இதுபோன்ற தவறுகளைக் களைய, மக்களுக்கும் முழு அதிகாரம் உண்டு. உரிய வரிகளைக் கட்டுங்கள் என்று வலியுறுத்தும் அரசு, மக்கள் செலுத்தும் வரி வந்து சேருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தாலே நாட்டுக்கு வேண்டிய வருமானம் வரும்; நாடும்  நாட்டு மக்களும் பாதுக்காக்கப்படுவர்.

அப்பாவி மக்களிடம் சில வியாபாரிகள் கொள்ளையடிப்படுவதை நாம் அனுமதிக்கலாமா ?

இந்தியா என்பது ஜனநாயக நாடு நம்புங்கள்...


சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த விருதுநகர் இராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் கைது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 46...


மரண விளிம்பில் 9 அனுபவங்கள்...

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்..

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்..

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும்..

மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம்..

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல்..

சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல்..

சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்..

ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்..

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல்..

அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

திமுக வும் திருட்டு அரசியலும்...


இறப்பதற்குள் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் தாராசுரம் ஐரவாதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்...


நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....


பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

பீட்டா ஏன் தமிழக நாட்டு மாடுகளை அழிக்க துடிக்கிறது என்று புரிகிறதா...


ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்...

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.

ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பது போல் முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.

உடலை வளர்த்தால் தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.

இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.
அரிசிக்கு மூன்று பங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும்.

கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது.

வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது.

பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழ வைக்கும்.

நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.

குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும்.

மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும்.

எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும்.

ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும்.

இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும்.

குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும்.

மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.

பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.

சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது..

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும்.

சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது.

கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும்.

நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும்.

குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.

மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள்.

விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.

மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும்.

பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது.

அதுவும் உணவே மருந்து...

மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள்.

வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான்.

கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும்.

உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

மருத்துவ மாப்பியாக்கள் - இதுவரை 13 மர்ம கொலைகள் அதில் முதலாவதாக 19 JUN 2015 ல் நடந்த கொலையை பற்றி இதில் விவரிக்கின்றோம்...


பதஞ்சலி இந்தி வணிகத்தை புறக்கணிப்போம். தமிழர் வணிகத்தை கட்டி எழுப்புவோம்...



பதஞ்சலி நிறுவனம் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 'சுதேசி' என்னும் உள்நாட்டு தயாரிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து அசுர வேகத்தில் தன்னுடையே பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது பதஞ்சலி நிறுவனம்.

பத்தாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள நிறுவனமாக இப்போது இந்நிறுவனம் இந்தி பாஜக அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் கட்டாயம் இந்தி எழுத்துக்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறது பதஞ்சலி நிறுவனம். இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியும் வருகிறது இந்நிறுவனம்.

உள்நாட்டு தயாரிப்பு என்று கூறிவிட்டு உள்நாட்டு மொழிகளுக்கு பதஞ்சலி நிறுவனம் இடமளிப்பதில்லை.

மேலும் இவர்களுக்கு வரும் இலாபத்தை  சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஆரிய வேத மத வளர்ச்சிக்கும்  பயன்படுத்துவோம் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை நேரடியாக சொல்லாமல் ஆன்மிகம், மதம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் செய்வோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது இந்நிறுவனம்.

இதில் வேடிக்கை என்னவெனில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்த பன்னாட்டு ஆதரவு நிறுவனமான 'futura group' என்ற நிறுவனத்தை தான் பொறுப்பில் அமர்த்தியுள்ளது பதஞ்சலி நிறுவனம்.

இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இத்தாலி நிறுவனங்களுடன் ஏற்கனவே கைகோர்த்து வணிகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது .

http://economictimes.indiatimes.com/industry/cons-products/fmcg/patanjali-enters-big-retail-with-future-group-tie-up/articleshow/49285002.cms

http://www.futuregroup.in/about-us/milestones.aspx

பதஞ்சலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே போட்டியல்ல.

பல உள்நாட்டு நிறுவனங்களுக்கும் இது போட்டி நிறுவனமாக அமைந்துள்ளது தான் வேதனை. 

பதஞ்சலி நிறுவனம் கொடுக்கும் விலையில் உள்நாட்டு நிறுவனங்களால் பொருட்களை கொடுக்க முடிவதில்லை. இதற்கு காரணம்  பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்துத்வா அரசின் முழு ஆதரவும் உள்ளது .

பாஜக அரசு பதஞ்சலி நிறுவனத்திற்கு பல நூறு ஏக்கர் நிலங்களை வழங்கி உள்ளது.

http://www.hindustantimes.com/india/maha-govt-allots-over-600-acres-of-land-for-baba-ramdev-s-patanjali/story-MDaQ0KAQIZ6v5LYjjBaFLJ.html

மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் ஒரு 'பெருநிறுவன' சாமியார்.

இவர் சாமியாராக இருந்து சம்பாதித்தது பல்லாயிரம் கோடிகள். இந்த கறுப்புப் பணத்தையும் வெள்ளைப் பணமாக மாற்ற இந்நிறுவனத்தை பயன் படுத்தியுள்ளார் பாபா ராம்தேவ்.

அதிக அளவில் கறுப்பு பணம் முதலீடு செய்வதால் இவர்கள் சந்தை விலையை விட குறைவான விலையில் பொருட்களை கொடுக்க முடிகிறது.

ஆனால் மற்ற உள்நாட்டு நிறுவனங்களிடம்  கறுப்புப் பணம் இந்த அளவிற்கு  இல்லை.

அதனால் அவர்களால் உற்பத்தி விலையை விட குறைந்த விலையில் கொடுக்க முடியாது.

இது தான் பதஞ்சலி நிறுவனத்திற்கு பெரும் ஆதாயமாகும்.

பொதுவாக உள்நாட்டு தயாரிப்புகள் விலை கூடுதலாகத் தான் இருக்கும்.

செக்கு எண்ணை, மலைத்தேன் , நாட்டு சர்க்கரை, பனவெல்லம், பற்பசை, குளியல் பொருட்கள்,  இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் அனைத்தும் விலை அதிகம் தான்.

காரணம் இதன் உற்பத்தி செலவுகள் அதிகம்.

இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தயாரிப்பு என்று கூறி தன்னுடைய பொருட்களை குறைந்த விலைக்கு விற்று வருகிறது.

இதனால் உண்மையான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பதஞ்சலிக்கு அரசின் மூலமாகவும், இந்துத்வா ஆதரவாளர்கள் மூலமாகவும்,  வெளிநாட்டில் இருந்தும் பெருமளவில் பணம் வருகிறது.

இதை வைத்துக் கொண்டு பதஞ்சலி நிறுவனம் மற்ற நிறுவனங்களை ஓரம்கட்டி தன்னுடைய நிறுவனத்தையும், இந்தி மொழியையும், சமற்கிருத மொழியையும் வளர்த்து வருகிறது.

ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழ வைக்கிறது பதஞ்சலி நிறுவனம்.

இந்தி தேசியத்தையும் ஆரிய இந்துத்வா சித்தாந்தங்களையும் வளர்க்கும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தொழில்களையும், உள்நாட்டு மொழிகளையும் பண்பாடுகளையும் அழிக்கும் வேலைகளையும் கட்சிதமாக செய்கிறது.

இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு நிச்சயம் உண்டு..

தமிழர்கள் எவரும் பதஞ்சலி நிறுவனப் பொருட்களை வாங்குதல் கூடாது. இந்தி மொழியில் எழுதப்பட்ட எந்த தனியார் நிறுவனப் பொருட்களையும்   வாங்குதல் கூடாது.

தமிழ்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குதல் வேண்டும்..

அது விலை கூடுதலாக இருந்தாலும் தமிழ்நாட்டு தயாரிப்புகளையே வாங்குதல் வேண்டும் . இப்படி ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே தமிழர்கள் தங்கள் வணிகத்தை தக்க வைக்க இயலும்.

பன்னாட்டு தேசம், இந்தி தேசம் முதலான அன்னிய பொருட்களை பொருட்களை புறக்கணித்து தமிழர் தேசத்தின் பொருட்களை வாங்குவது தமிழர்களின் பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம், அரசியல் ஆகியவற்றை பாதுகாக்கும்.

விழிப்போடு இருப்போம் தமிழர் தேசத்தை பாதுகாப்போம்...

டெங்குவைத் தொடர்ந்து நெல்லையை மிரட்டும் பன்றிக்காய்ச்சல் - ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம்...


சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.

அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.

அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர்.

இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது. செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது.

ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ..

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்..

அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்...

சித்தர்களின் எளிய மருந்துகள்..


1.சுக்கு...

கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி...

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி...

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு, புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி...

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்...

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது. மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி...

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும். இரத்தம் சுத்தமாகும். எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும். காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை...

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி, மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு...

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது. சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய், பூசணிக்காய்...

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது. நீரிழிவு நோய்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்...

வயிற்றுப் பொருமல், தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு...

இதய நோயாளிகளும், சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும். புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்..

12.கரிசலாங்கண்ணி கீரை, கீழாநெல்லி..

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும். குடிப்பழக்கமும், மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும், வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம், வசாகா, குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சுக்கு,மிளகு,திப்பிலி, மஞ்சள், புளி, துளசி, பெருங்காயம், ஆடாதொடை, பூண்டு, எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

13.சுக்கு, மிளகு, திப்பிலி...

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமிட்டு குடித்து வந்தால் குணமடையும்...

திமுக கருணாநிதியின் துரோகங்கள்....


அழிந்து வரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்...


அரிக்கன் விளக்கு - காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி - குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா - அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை - ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய் - கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல் - வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான் - தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம் - பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் - (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் - வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி - (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் : குஞ்சலம் - (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா - (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம் - (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு - ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு - வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி - (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி - பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி - (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம் - கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி - (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை - (பானை போன்றவை உருண்டு விடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு - மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்க விடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம் - (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா - நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி - பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்து கொண்டே வருகின்றன.

முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம்.

அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்...

அகநானூறு...


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும்.

இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.

நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல.

இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன.

இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே.

அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது. அவை...

களிற்றியானைநிரை:

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்:

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை:

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்..

அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.

தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்:

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது.

யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை

"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"

என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்..

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது...

IAS தேர்வில் பிட் அடித்த நெல்லை IPS அதிகாரி...


ஒரு வேளை IPS தேர்விலும் பிட் அடிச்சு தான் பாஸ் பண்ணியிருப்பாரோ?

ஒரு நிமிடத்தில் 142 முறை தண்டால் மதுரை பொறியியல் பட்டதாரி சாதனை...


மதுரையில் கை விரல் கணுக்களை ஊன்றி, ஒரு நிமிடத்தில் 142 முறை தண்டால் எடுத்து பொறியியல் பட்டதாரி சதீஷ், 22, சாதனை...

நாம் தான் மாட்டை காப்பாற்றி விட்டோம் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்...


சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம பாதிரியார் கைது...


திருச்சி சுப்ரமண்ய புரத்தில் “மேசே மினிஸ்ட்ரி” எனும் பெயரில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி, அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது.

கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப், நேற்று ஜெர்மன் நாட்டில் இருந்து திருச்சி வந்த அவன் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டான்...

வசந்த் தொலைக்காட்சி நிருபரின் ரவுடித்தனம்...


ஆவடி இரயில் நிலயத்தில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் வந்தவரை அபராதம் கட்ட சொன்ன பெண் டிக்கட் பரிசோதகரை, அந்த நபர் நான் ஒரு மீடியா ஆள் (வசந்த் TV) உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டும் வீடியோ.

காவல் துறை மற்றும் இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஆதார் கார்டும் அரசின் சூழ்ச்சியும்...


தற்போது அரசு ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்கச் சொல்கிறது அதில் என்ன இருக்கிறது என நீங்க நினைக்கலாம். அப்படி இணைத்தால் நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள், எப்போது, என்ன என்று நம்மைக் கண்காணித்து நம் தனியுரிமையைப் பறிக்கும் திட்டமே இது.

உதாரணத்திற்கு, அரசு நமக்கு விரோதமான செயல்களையே செய்கிறது அப்போது ஸ்பைடர் படத்தில் குறிப்பிட்ட வார்த்தையைக் கண்காணிப்பது போல புரட்சி என்ற வார்த்தையைக் கேட்டாலே சிறை வைத்து விடுவார்கள்.

ஆக மொத்தம் நம்ம வீட்டுல என்ன நடக்குது, எவன் கிட்ட என்ன பேசுறோம்ங்குற பிக்பாஸ் அடிமை திட்டம் தான் இது. ஓடவும் முடியாது, ஔியவும் முடியாது.

மொபைல் எண்-ஆதார் அட்டை இணைப்பு செய்தியையும், இலவசமாக கொடுக்கப்பட்ட ஜியோ திட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்க புரிதல் வேற லெவல்ல இருக்கும்...

30/10/2017

கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...


திருநெல்வேலியில், சிறை கைதிகளால் கட்டப்பட்ட, தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம், 175வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது...


திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில், 200 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். காடுகள் வளமாக இருந்த காலம் அது. பாபநாசம், காரையார், சேர்வலாறு போன்ற அணைகளும் இல்லை. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை முழுவதும், தாமிரபரணியில் வெள்ளமாக பெருக்கெடுக்கும்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி பகுதி மக்கள், தாமிரபரணி ஆற்றை கடக்க, படகுகளை பயன்படுத்தி வந்தனர். ஆற்றங்கரையில் அமைந்த படகு துறையில், எப்போதும், ஆண்கள், பெண்கள், வியாபாரிகள் கூட்டம் மொய்க்கும். எல்லாருக்கும் படகு கிடைக்காது. இடம் கிடைத்தவர்கள் முதலில் அக்கரைக்கு போய், மற்றவர்கள் படகு திரும்பும் வரை காத்திருக்க வேண்டும்.

படகில் தட்டுமுட்டு சாமான்களோடு செல்பவர்களின் பொருட்கள் களவு போனதுடன், ஜாதி சண்டைகளும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பிரிட்டிஷார் ஆட்சி நடந்த அக்காலத்தில், திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் இருந்த படகு துறையில், ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து, பொழுது போவது ஒரு யுகமாக நடந்து வந்தது.

ஒரு கட்டத்தில் படகு துறையில் நடந்த ஜாதி கலவரம், கொலையில் முடிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என, கருதிய கலெக்டர் தாம்சன், தனக்கு முன் இருந்த கலெக்டர் ஈடன், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து, எழுதி வைத்த குறிப்பை படித்தார்.'திருநெல்வேலி- - பாளையங்கோட்டை நகரங்களை இணைக்க, தாமிரபரணி ஆற்றில், 800 அடி நீளத்தில் பாலம் கட்ட வேண்டும். இது அவசரமும், அவசியமும் கூட; இதன் மூலம் குழப்பமும், வன்முறையும் அகலும்.

'திருநெல்வேலி ஜில்லா, எல்லா நிலைகளிலும் வளம் கொழிக்கும்' என, ஈடன் எழுதியிருந்ததை படித்த கலெக்டர் தாம்சன், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அப்போது கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாராக பணிபுரிந்த, நெல்லையைச் சேர்ந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார்.

பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்,
760 அடி நீளம், 21 அடி அகலம், 11 ஆர்ச்சுகளோடு பாலம் அமைப்பதற்கான வரைபடம் தயாரானது. ஆர்ச்சின் விட்டம், 60 அடியாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டை தூண்கள், ரோமானிய அரண்மனை தூண்களை நினைவு படுத்தும் வகையில் அமைக்க முடிவானது. இதை கட்டி முடிக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. கலெக்டர் தாம்சன், தன்னிடம் சிரஸ்தாராக இருந்த, செல்வந்தர் சுலோச்சன முதலியாரை அணுகினார்.

அக்காலத்திலேயே, கோடீஸ்வரராக இருந்த சுலோச்சன முதலியார், பாலம் கட்டுமானத்தின் முழு செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்தார். அதன்பின், பாலம் கட்டுமான பணிகள் துவங்கி, மளமளவென நடந்தன.

சிமெண்ட் இல்லாத காலத்தில், சுண்ணாம்புடன் பதனீர், கருப்பட்டி அரைத்து பாலம் கட்டப்பட்டது. பாலப் பணிகளில், சிறையில் இருந்த ஆயுள் கைதிகள், 100 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பணிகள் முடிந்து, 1843ம் ஆண்டு, நவம்பர் மாதம், பாலம் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானை பவனி வர, சுலோச்சன முதலியார், நீதிபதி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சென்றனர். பாலத்திற்கு, நிதியுதவி அளித்த சுலோச்சன முதலியார் பெயரே சூட்டப்பட்டது.

பாலம் கட்டப்பட்டு, 174 ஆண்டுகளை கடந்து, வரும் நவம்பரில், 175வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பயணித்தாலும், இன்றும் கம்பீரம் குறையாமல், நெல்லையின் அடையாள சின்னமாக காட்சி அளிக்கிறது...

மாணிக்சந்த் குரூப் நிறுவனர் புற்றுநோயால் மரணம்...


மோடியின் GST வரியால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினி காந்தால் கூட ரூ 20000 வாடகை கொடுக்க முடியாவிடில்...


ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்?

தினம் தினம் உழைத்து பிழைக்கும் மக்கள் எலும்பை நொறுக்கும் GST. வரி வேண்டாம் குடி மக்களுக்கு...

இலுமினாட்டிகளின் இருப்பு...


இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம்., அதன் தொடர்சியாக, இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

யூதர்கள்:

திருக்குர்ஆன் அநேக இடங்களில் இலுமினாட்டிகளை பற்றி பேசியிருக்கிறது., பெரும்பான்மையானவர்கள் அந்த வசனங்கள் ஒட்டு மொத்த யூதர்களையும் குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் அந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நுணுக்கங்களை சற்று கவனித்து பார்க்கும் போது அது ஒட்டு மொத்த யூதர்களையும் குறிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.,

அத்தியாயம் 2 வசனம் 97 மற்றும் 98 வானதூதர் ஜிப்ரீலை (தூயஆவி கேப்ரியல்) தங்களது எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக அருளப்பட்டது., யார் அவர்கள்? எதற்காக அவர்கள் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள்? மோசேவிற்கு (pbuh) தூது செய்தியை கண்டு வந்தது இந்த இந்த ஜிப்ரீல் தானே? இயேசுவுக்கு (pbuh) உறுதுணையாக இருந்தது இந்த ஜிப்ரீல் தானே? அப்படியிருக்க ஒட்டுமொத்த யூதர்களும் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?

அத்தியாயம் 2 வசனம் 96ல் ஆயிரம் வருடம் வாழ்நாள் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு கூட்டத்தை பற்றி இறைவன் அறிவிக்கிறான்., இன்றும் சரி, பேரரசர் முஹம்மதின் (pbuh) காலத்தில் வாழ்ந்த (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத) யூதர்களும் சரி, அனைவருமே ஆயிரம் வருடம் வாழ வேண்டும் என்ற பேராசையோடு தான் இருந்தார்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது., அவ்வாறிருக்க இந்த வசனம் ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கத்தான் செய்கிறது என்பது ஏற்புடையதல்ல., இந்த வசனத்தின் துவக்கத்தில், "பூமியில் உள்ள மற்ற மனிதர்களை விடவும், (குறிப்பாக) இணை கற்பித்தோரை விடவும் வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது., இதில் வரும் இணை கற்பித்தோர்கள் என்ற வார்த்தை யூத இணை வைப்பாளர்களையும் சேர்த்தே குறிக்க போதுமானது எனும் பொது அதை விடவும் அதிகம் வாழ ஆசைப்படும் அந்த "அவர்கள்" யார்?

அத்தியாயம் 2 வசனம் 100ல் வரும் "அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா?" என்ற வாசகத்தில் முதலில் வரும் "அவர்கள்" என்ற வார்த்தை ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும், எனில் "அவர்களில் ஒரு பகுதியினர்" என்ற வார்த்தை யாரைக் குறிக்கும்?

அத்தியாயம் 2 வசனம் 101ல் வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் இறைவனின் வேதத்தைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது., வேதம் குடுக்கப்பட்டவர்கள் என்பது ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும்., (தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகியவை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள்) எனில் அதில் ஒரு பிரிவினர் என்ற வார்த்தை யாரை குறிக்க கையாளப்பட்டுள்ளது?

இலுமினாட்டிகள்:

இலுமினாட்டிகளுக்கு தான் ஜிப்ரீல் எதிரி., ஜிப்ரீலை எதிரி என்று சொல்லும் அவர்கள் அதற்க்கு சொல்லும் காரணம் அவர் பூமிக்கு வரும் பொழுதெல்லாம் போரையும், சிரமத்தையும் கொண்டு வருகிறார் என்பது தான்., இவர்கள் இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்த போது அந்த சதியை முறியடிக்க இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டவர் இந்த ஜிப்ரீல்., இது போன்று இலுமினாட்டிகள் சதி செய்யும் போதெல்லாம் அதை முறியடிக்க இறைவனால் அனுப்பப்படுபவர் இந்த ஜிப்ரீல்., எனவே தான் இவர்கள் ஜிப்ரீலை தங்கள் எதிரி என்கின்றனர்.,

ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டும் என்பது இலுமினாட்டிகளின் கனவு, அவர்கள் தங்களின் ஆயுளை நீடித்துக் கொள்வதற்கான ஆய்வுகளை செய்து வருகின்றனர் என்பதை பல இலுமினாட்டி ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்., இலுமினாட்டிகளே இறைவனின் வேதத்தை அது உண்மை என்று தெரிந்திருந்தும் தங்களது முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்தனர்., மேலும் அவர்களே ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவற்றை முறிக்கின்றனர்., பேரரசர் சாலமன் (pbuh) போன்றவர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளின் மீது இவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையே இவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம். [2:90].

அத்தியாயம் 2 வசனம் 102 "ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்" என்று ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்., யார் இவர்கள்? எதை பின்பற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது இலுமினாடிகளின் இருப்பை உறுதி செய்யும் ஆதாரம்., இந்த "இவர்கள்" தான் இலுமினாட்டிகள் அதாவது ஃபிரீமேசன்கள்., இவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தது, லூசிஃபர் என்ற ஜின் (இப்லீஸ் அல்ல) இவர்களிடம் கொண்டுவந்து கொடுத்த சூனிய குறிப்புகள்., இவர்கள் பேரரசர் சாலமனும் (pbuh) தங்களை சேர்ந்தவரே என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர், அதை மறுக்கும் விதமாகவே அத்தியாயம் 2 வசனம் 102ல் ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை, ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். என்ற வாக்கியம் அருளப்பட்டது.,

அத்தியாயம் 2 வசனம் 91ல் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று இவர்கள் சொல்வது தவ்ராத்தையோ, ஜபூரையோ அல்ல., அதை இந்த வசனத்தின் இறுதியில் இறைவனே உறுதி செய்கிறான்., இவர்கள் அவற்றை பின்பற்றியிருந்தால் அதற்கு பிறகு வந்த இறைத்தூதர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள்., இவர்கள் பின்பற்றியது லூசிஃபரிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டதை தான்.,

திருக்குர்ஆன் 2:75, 2:100, 4:81, 3:69, 3:23, 3:78 மற்றும் 4:113 இந்த வசங்கள் எல்லாம் யூதர்களில் ஒரு சாராரான இலுமினாட்டிகளை பற்றி பேசும் வசனங்கள்., இவர்களே பேரரசர் முஹம்மதை(pbuh) அவரின் நபித்துவத்திற்கு முன்பே கொன்றுவிட வேண்டும் என்று சதி செய்துக் கொண்டிருந்தவர்கள்., இவர்கள் தான் இலுமினாட்டிகள்.,

இலுமினாட்டிகளின் நோக்கம்:

மனிதர்களை அடிமைப்படுத்தி பூமி முழுவதையும் ஒரு தலைமைக்கு கீழ் கொண்டு வந்து நிலையான ஆட்சியை ஏற்படுத்துவது., பிறகு தங்களது கடவுள் லூசிஃபருக்காக இறைவனோடு போர் செய்து அதில் வெற்றி பெற்று தங்களது கடவுளான லூசிஃபரை இந்த பிரபஞ்சத்தின் இறைவனாக ஆக்குவது., இதுவே இவர்களின் நோக்கம் மற்றும் இலக்கு.,

அத்தியாயம் 72 வசனம் 1 முதல் 15 வரை பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்களின் படி, மனிதர்கள் பாதுகாப்பு தேடியதால் ஏற்பட்ட கர்வத்தால் தன்னிலை இழந்த ,மூடனான ஒரு ஜின், இறைவனுக்கு பலகீனம் இருப்பதாகவும், பூமியில் வைத்து  அவனை வெல்ல முடியும் என்று சொல்லிக் கொண்டு திரிந்தான்., அவன் தான் லூசிஃபர்., பேரரசர் சாலமானால் (pbuh) சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஜின் தான் இலுமினாட்டிக்ளுக்கு சூனிய மந்திர குறிப்புகளை கொடுத்தான்., அத்தியாயம் 38 வசனம் 37 மற்றும் 38ன் படி இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) ஜின்களில் கட்டிடம் கட்டுவோர்களையும், விலங்கிடப்பட்ட சில ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்தான்., லூசிஃபரின் முன்னோர்கள் கட்டிடக்கலை வல்லுனர்களாகவும் (பிரமீடை காட்டியது அவர்கள் தான்) பேராற்றல் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது., இதுவே லூசிஃபர் கர்வம் கொள்ள காரணம்.,[72:6] அந்த கர்வம் அவனால் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இறைவனாக இருந்து ஆளுமை செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கி வலு சேர்த்தது., தஜ்ஜாலை கொண்டு மனிதர்களை அடிமைபடுத்தி அதன் மூலம் பூமியில் வைத்து இறைவனை வெல்ல முடியும் என்பதும் ஒரு வேளை தோற்றுவிட்டால் தப்பி ஓடிவிடலாம் என்பதும் தான் இவர்களின் திட்டம்.,[72:12].

நான் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் வசனங்கள் இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்ய போதுமானவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்., இறைவன் நாடினால் இதைவிடவும் அதிகமான ஆதாரங்கள் கூடிய விரைவில் கிடைக்கும்.,

தொடரும்...

தகவல் - musthafays....

அதிமுக ஓபிஎஸ் - இபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு...


தேவர் குருபூஜை விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எல்லாம் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர்...

திருவிசநல்லூரில் சூரிய ஒளிக் கடிகாரம்...


14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்...

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது...

பாஜக வையும் மோடியையும் அமெரிக்க கார்டூனிஸ்ட் காரி துப்பியது...


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...


மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

அரசியல் உண்மைகள்...


வேலூர் - விரிஞ்சிபுரம் - தமிழனின் காலம் காட்டும் கல்...


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்...

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில்.

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...

மருத்துவ மாஃபியா உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதே எமது நோக்கங்களில் ஒன்று...


தமிழ்நாட்டை ஏன் தமிழனே ஆள வேண்டும்...


ஓர் உணர்வுள்ள தமிழன் தமிழ்நாட்டை ஆளாததால் உலக அதிசயங்களில் இடம் பெறாமலும் மராத்திய வந்தேரி அரங்காவலராகவும் உள்ள தமிழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்..

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ?
கோயில் எப்படி கட்டப்பட்டது ? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்…

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு :

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு :

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதது...

கேன்சரை குணப்படுத்தும் கஞ்சா...


அளவோடு எடுத்தால் நலம்.. அளவுக்கு மீறினால்  நஞ்சு.. இதை மறைக்கும் மருத்துவ மாஃபியாக்கள்...

உயர் இரத்த அழுத்தம் குறைய...


பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்..

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்ததுள்ளது..

பீட் ரூட் சாறு...

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன.

இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்...

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது...

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது...

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.

இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.

எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்...

நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர்.

இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சித்த வைத்தியக் குறிப்புகள்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லியை மென்று தின்றுவிட்டு, பின்னர் தண்ணீர் குடித்து வரவேண்டும்..

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்கள் சுத்தமடையும். இரத்த அழுத்த நோய் படிப்படியாக குறையவரும். இவ்வாறு சித்த மருத்துவ நூலில் கூறப்பட்டு உள்ளது.

இது அனுபவ ரீதியாக சிலருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. பக்க விளைவுகள் ஏதுமற்ற இந்த முறையையும் பயன்படுத்திப் பாருங்கள்..

மேலும், வெள்ளைப் பூண்டை அதிகமாக உணவுடன் சேர்த்துக்கொள்வதாலும் உயர் இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படும் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்தி உள்ளது...