30/10/2017

இலுமினாட்டிகளின் இருப்பு...


இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம்., அதன் தொடர்சியாக, இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

யூதர்கள்:

திருக்குர்ஆன் அநேக இடங்களில் இலுமினாட்டிகளை பற்றி பேசியிருக்கிறது., பெரும்பான்மையானவர்கள் அந்த வசனங்கள் ஒட்டு மொத்த யூதர்களையும் குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் அந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நுணுக்கங்களை சற்று கவனித்து பார்க்கும் போது அது ஒட்டு மொத்த யூதர்களையும் குறிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.,

அத்தியாயம் 2 வசனம் 97 மற்றும் 98 வானதூதர் ஜிப்ரீலை (தூயஆவி கேப்ரியல்) தங்களது எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக அருளப்பட்டது., யார் அவர்கள்? எதற்காக அவர்கள் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள்? மோசேவிற்கு (pbuh) தூது செய்தியை கண்டு வந்தது இந்த இந்த ஜிப்ரீல் தானே? இயேசுவுக்கு (pbuh) உறுதுணையாக இருந்தது இந்த ஜிப்ரீல் தானே? அப்படியிருக்க ஒட்டுமொத்த யூதர்களும் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?

அத்தியாயம் 2 வசனம் 96ல் ஆயிரம் வருடம் வாழ்நாள் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு கூட்டத்தை பற்றி இறைவன் அறிவிக்கிறான்., இன்றும் சரி, பேரரசர் முஹம்மதின் (pbuh) காலத்தில் வாழ்ந்த (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத) யூதர்களும் சரி, அனைவருமே ஆயிரம் வருடம் வாழ வேண்டும் என்ற பேராசையோடு தான் இருந்தார்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது., அவ்வாறிருக்க இந்த வசனம் ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கத்தான் செய்கிறது என்பது ஏற்புடையதல்ல., இந்த வசனத்தின் துவக்கத்தில், "பூமியில் உள்ள மற்ற மனிதர்களை விடவும், (குறிப்பாக) இணை கற்பித்தோரை விடவும் வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது., இதில் வரும் இணை கற்பித்தோர்கள் என்ற வார்த்தை யூத இணை வைப்பாளர்களையும் சேர்த்தே குறிக்க போதுமானது எனும் பொது அதை விடவும் அதிகம் வாழ ஆசைப்படும் அந்த "அவர்கள்" யார்?

அத்தியாயம் 2 வசனம் 100ல் வரும் "அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா?" என்ற வாசகத்தில் முதலில் வரும் "அவர்கள்" என்ற வார்த்தை ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும், எனில் "அவர்களில் ஒரு பகுதியினர்" என்ற வார்த்தை யாரைக் குறிக்கும்?

அத்தியாயம் 2 வசனம் 101ல் வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் இறைவனின் வேதத்தைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது., வேதம் குடுக்கப்பட்டவர்கள் என்பது ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும்., (தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகியவை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள்) எனில் அதில் ஒரு பிரிவினர் என்ற வார்த்தை யாரை குறிக்க கையாளப்பட்டுள்ளது?

இலுமினாட்டிகள்:

இலுமினாட்டிகளுக்கு தான் ஜிப்ரீல் எதிரி., ஜிப்ரீலை எதிரி என்று சொல்லும் அவர்கள் அதற்க்கு சொல்லும் காரணம் அவர் பூமிக்கு வரும் பொழுதெல்லாம் போரையும், சிரமத்தையும் கொண்டு வருகிறார் என்பது தான்., இவர்கள் இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்த போது அந்த சதியை முறியடிக்க இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டவர் இந்த ஜிப்ரீல்., இது போன்று இலுமினாட்டிகள் சதி செய்யும் போதெல்லாம் அதை முறியடிக்க இறைவனால் அனுப்பப்படுபவர் இந்த ஜிப்ரீல்., எனவே தான் இவர்கள் ஜிப்ரீலை தங்கள் எதிரி என்கின்றனர்.,

ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டும் என்பது இலுமினாட்டிகளின் கனவு, அவர்கள் தங்களின் ஆயுளை நீடித்துக் கொள்வதற்கான ஆய்வுகளை செய்து வருகின்றனர் என்பதை பல இலுமினாட்டி ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்., இலுமினாட்டிகளே இறைவனின் வேதத்தை அது உண்மை என்று தெரிந்திருந்தும் தங்களது முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்தனர்., மேலும் அவர்களே ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவற்றை முறிக்கின்றனர்., பேரரசர் சாலமன் (pbuh) போன்றவர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளின் மீது இவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையே இவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம். [2:90].

அத்தியாயம் 2 வசனம் 102 "ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்" என்று ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்., யார் இவர்கள்? எதை பின்பற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது இலுமினாடிகளின் இருப்பை உறுதி செய்யும் ஆதாரம்., இந்த "இவர்கள்" தான் இலுமினாட்டிகள் அதாவது ஃபிரீமேசன்கள்., இவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தது, லூசிஃபர் என்ற ஜின் (இப்லீஸ் அல்ல) இவர்களிடம் கொண்டுவந்து கொடுத்த சூனிய குறிப்புகள்., இவர்கள் பேரரசர் சாலமனும் (pbuh) தங்களை சேர்ந்தவரே என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர், அதை மறுக்கும் விதமாகவே அத்தியாயம் 2 வசனம் 102ல் ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை, ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். என்ற வாக்கியம் அருளப்பட்டது.,

அத்தியாயம் 2 வசனம் 91ல் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று இவர்கள் சொல்வது தவ்ராத்தையோ, ஜபூரையோ அல்ல., அதை இந்த வசனத்தின் இறுதியில் இறைவனே உறுதி செய்கிறான்., இவர்கள் அவற்றை பின்பற்றியிருந்தால் அதற்கு பிறகு வந்த இறைத்தூதர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள்., இவர்கள் பின்பற்றியது லூசிஃபரிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டதை தான்.,

திருக்குர்ஆன் 2:75, 2:100, 4:81, 3:69, 3:23, 3:78 மற்றும் 4:113 இந்த வசங்கள் எல்லாம் யூதர்களில் ஒரு சாராரான இலுமினாட்டிகளை பற்றி பேசும் வசனங்கள்., இவர்களே பேரரசர் முஹம்மதை(pbuh) அவரின் நபித்துவத்திற்கு முன்பே கொன்றுவிட வேண்டும் என்று சதி செய்துக் கொண்டிருந்தவர்கள்., இவர்கள் தான் இலுமினாட்டிகள்.,

இலுமினாட்டிகளின் நோக்கம்:

மனிதர்களை அடிமைப்படுத்தி பூமி முழுவதையும் ஒரு தலைமைக்கு கீழ் கொண்டு வந்து நிலையான ஆட்சியை ஏற்படுத்துவது., பிறகு தங்களது கடவுள் லூசிஃபருக்காக இறைவனோடு போர் செய்து அதில் வெற்றி பெற்று தங்களது கடவுளான லூசிஃபரை இந்த பிரபஞ்சத்தின் இறைவனாக ஆக்குவது., இதுவே இவர்களின் நோக்கம் மற்றும் இலக்கு.,

அத்தியாயம் 72 வசனம் 1 முதல் 15 வரை பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்களின் படி, மனிதர்கள் பாதுகாப்பு தேடியதால் ஏற்பட்ட கர்வத்தால் தன்னிலை இழந்த ,மூடனான ஒரு ஜின், இறைவனுக்கு பலகீனம் இருப்பதாகவும், பூமியில் வைத்து  அவனை வெல்ல முடியும் என்று சொல்லிக் கொண்டு திரிந்தான்., அவன் தான் லூசிஃபர்., பேரரசர் சாலமானால் (pbuh) சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஜின் தான் இலுமினாட்டிக்ளுக்கு சூனிய மந்திர குறிப்புகளை கொடுத்தான்., அத்தியாயம் 38 வசனம் 37 மற்றும் 38ன் படி இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) ஜின்களில் கட்டிடம் கட்டுவோர்களையும், விலங்கிடப்பட்ட சில ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்தான்., லூசிஃபரின் முன்னோர்கள் கட்டிடக்கலை வல்லுனர்களாகவும் (பிரமீடை காட்டியது அவர்கள் தான்) பேராற்றல் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது., இதுவே லூசிஃபர் கர்வம் கொள்ள காரணம்.,[72:6] அந்த கர்வம் அவனால் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இறைவனாக இருந்து ஆளுமை செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கி வலு சேர்த்தது., தஜ்ஜாலை கொண்டு மனிதர்களை அடிமைபடுத்தி அதன் மூலம் பூமியில் வைத்து இறைவனை வெல்ல முடியும் என்பதும் ஒரு வேளை தோற்றுவிட்டால் தப்பி ஓடிவிடலாம் என்பதும் தான் இவர்களின் திட்டம்.,[72:12].

நான் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் வசனங்கள் இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்ய போதுமானவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்., இறைவன் நாடினால் இதைவிடவும் அதிகமான ஆதாரங்கள் கூடிய விரைவில் கிடைக்கும்.,

தொடரும்...

தகவல் - musthafays....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.