30/10/2017

தமிழர் அரசு முறையை சிதைத்த பாளையப்பட்டு முறை...


16ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேர, சோழ, பாண்டியர்களாகவும், சிற்றரசர்களாகவும் வாழ்ந்த தமிழர் அரசுகள் தங்களுக்குள்ளே போரிட்டு வந்த போதும் அயலக எதிரிகளை மாலிக்காபூர் படையெடுப்பு வரை வலுவாக எதிர்த்து மீண்டு வந்திருக்கின்றனர்.

அதன் பின்பு அமைந்த வடுகர்களின் ஆதிக்கத்தின் போது மட்டும் மீளவே முடியாமல் எப்படிச் சிதறுன்டு போயினர்? 

தெலுங்கு நாயக்கர்களின் 'சீரிய சிந்தனையில்' விளைந்த பாளையக்காரர்கள் முறை எதற்காக ஏற்படுத்தப் பட்டது?

விசயநகர வடுக அரசின் 'குமாரகம் பண நாயக்கன்' காலத்தில் சுல்தான்களை விரட்டும் சாக்கில் தமிழகம் மீதான படையெடுப்பு  வேட்டை நாய்கள் துணையுடன் துவங்கியது.

(பார்ப்பானை விரட்டும் சாக்கில் சமீபம் வரை தமிழனை ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் திருட்டுத் திராவிட வாரிசுகளைப் போல்) 

மதுரை துவங்கி தமிழகத்தின் பேரரசுகளும், சிற்றரசுகளும் வடுகத்தின் வாள்முனையிலும், வஞ்சக முனையிலும் வீழ்ந்தன.

வீழ்த்த முடியாதவை பொட்டுக்கட்டி ஸ்பெசல் 'சொர்க்க வாசல்' ஆயுதத்தால் வீழ்த்ப்பட்டன..

கிருஷ்ணதேவராயன் காலத்தில் 'நாகமநாயக்கன்' கைப்பற்றப்பட்ட பாண்டிய நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டான்..

கிருஷ்ணதேவராயனுக்கு அல்வா கொடுத்து   தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த நாகமநாயக்கனை அவனது மகன் 'விஸ்வநாத நாயக்கனை' கொண்டே வீழ்த்தினர்.

தமிழகத்தைப் பாளையங்களாகப் பிரித்து சின்னாபின்னப் படுத்திய புண்ணியவான் இந்த விஸ்வநாத நாயக்கனே..

பாண்டியநாடு மட்டும், பாஞ்சாலங்குறிச்சி துவங்கி  காமநாயக்கனூர் வரை 72 பாளையங்களாகப் பிரிக்கப் பட்டன. 

பாளையத்துச் ஜமீன்களாக தெலுங்கர்களும், தெலுங்கர்கள் ஆதிக்கம் செய்ய இயலா இடங்களில் தமிழ்த் தலையாட்டிப் பொம்மைகளும் நியமிக்கப் பட்டன..

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன்  கெட்டிப் பொம்முலு நாயக்கரும் அவ்வழி வந்த தெலுங்கு குலக்கொழுந்தே...

பிரிக்கப்பட்ட பாளையங்களில் பாளையக்காரர் எனவும், ஜமீன்தார் எனவும் அழைக்கப் பட்டவர்கள் வைத்ததே சட்டம்.

நீட்டிய இடத்தில் வரி வசூல். பாளையத்துக்கு உட்பட்ட குடிகள் அனைத்தும் அடிமைகள்.

முக்கியமாக எந்தப் பெண்கள் வயதுக்கு வந்தாலும் முதலில் பாளையத்துக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும்.

இவ்வளவு வசதியை அள்ளிக் கொடுத்த விஜயநகரப் பேரரசை என்ன மானாவுக்குப் பாஸூ ரிஸ்க் எடுத்து சண்டைப் போடனும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.