1956ல் மொழிவாரி மாநில எல்லைகள் மறுசீரமைப்பின் போது, தெற்கே பெருந்தமிழர் மார்சல் நேமணியும்..
வடக்கே தமிழரசுகழக நிறுவனர் பெருந்தமிழர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவரின் பெரும் போராட்டங்களின் விளைவாக..
தெற்கே குமரி மாவட்டமும், வடக்கே தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, திருத்தணி, சோழிங்கூர், ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்ட்டு வரையிலான நமது நிலப்பரப்பு தமிழகத்துடன் துண்டிக்கப்படுவது முறியடிக்கப்பட்டது.
இந்த நிலப்பரப்புகள் தமிழகத்தின் பகுதியாக தொடர்வதின் பெருமை ஐயாக்கள் மார்சல் நேசமணி் மற்றும் மபொசி இருவரையுமே சாரும்.
அன்று திராவிட நிறுவன தலைவர் பெரியார், எல்லை மறுசீரமைப்புக் குழுவின் உறுப்பினறும், முள்ளைப் பெரியார் பகுதியின் நிலக்கிழார் பணிக்கர் என்பவரின் முகவராக, ஆதரவாளராக, தரகராக, சகல கீழறுப்பு வேலகளையும் கமுக்கமாக செய்து முடித்து, முல்லைப்பெரியார், தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்க துணையாய் இருந்தார்.
அவ்வாறே ''அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடென" கூவித்திரிந்த காகிதப்புலி திமுக., ஹிந்திய வல்லாதிக்கத்தின் ஏவலர் காங்கிரஸ் கட்சியும், திராவிட நிறுவன பெரியாரும், அன்றைய பிரஜா சோசலிஸ்ட் என்ற துரோகிகளும் "தமிழக நிலப்பரப்பை" மறுசீரமைப்பு என்ற பெயரில் பறித்த நடுவண் அரசை எதிர்த்து ஒரு கண்டன அறிக்கை, மாநில மத்திய அரசுகளுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நடத்த வில்லை என்பதே உண்மை.
இன்று வேண்டுமென்றால் கருணாநிதி, தானும் காமராஜரும் "தமிழருக்கென மொழிவாரி மாநிலம்" அமைய பெரும்பாடு பட்டதாக தமிழர்தேசிய கருத்தியல் வளர்ச்சிகண்டு வெற்றுக் கூச்சலிடுவார்.
எல்லை மறுசீரமைப்பின் போது தமிழகம் அடர்ந்தவனப்பகுதி, நதிநீர் உற்பத்திப் பகுதி, சமநிலப் பகுதி, மலைப் பகுதியென, இன்றைய நிலப்பரப்பின் மூன்றில் ஒருபகுதியாக 65, 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை "திராவிட வீணர்களின் கயமையாலும், ஹிந்திய அரசின் துரோகத்தாலும்" இழந்திருக்கின்றோம், ஆனாலும், துரோகம் இன்றும் தமிழினத்தின் நிழலாக தொடர்கிறது.
தமிழர்களது கையில் ஆட்சியதிகாரம் கிட்டினால் துரோகத்தை துடைத்தெறிய முடியும் என்பதை நினைவில் நிறுத்தி, இருக்கும் நமது நிலபகுதியை காத்துக் கொடுத்த இருபெரும் தமிழர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தி மகிழ்வோம்...
வையகம் உள்ளவரை அவர்களது புகழ் வாழ்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.