சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை. இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது.
மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது.
மந்தாரை இலைகளை பயன்படுத்தி அஜீரண கோளாறு, காய்ச்சல், மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை இலை, இஞ்சி, பனங்கற்கண்டு.
செய்முறை: மந்தாரை இலையை அரைத்து 10 முதல் 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி துண்டு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி குடித்துவர அல்சர் வராமல் காக்கும். புண்களை ஆற்றுவதுடன் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளும் அற்புத மருந்தாக விளங்குகிறது. காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். மருத்துவ குணங்களை உடைய மந்தாரை இலை பசியின்மையை போக்கும் தன்மை கொண்டது.
மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.
மந்தாரை பூக்கள் 4 எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிக்கட்டி குடித்துவர மாதவிலக்கு கட்டுக்குள் வரும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். மூட்டுவலியை போக்கும்.
மந்தாரை பூக்களை பயன்படுத்தி கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் தைலம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை பூக்கள், விளக்கெண்ணெய்.
ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் லேசாக நசுக்கி வைத்திருக்கும் மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதை ஆறவைத்து கண்களை சுற்றி இரவு தூங்கப்போகும் முன்பு பூசிவர கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
மந்தாரை பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. தோல்நோய்களை சரிசெய்யும் தன்மை உடையது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்த கசிவை குணப்படுத்தும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.