தமிழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை ஆதாரத்துடன் டிசம்பர் 9-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
அதில், ரூ. 7.10 லட்சம் கோடி ஆற்று மணல் கொள்ளை, ரூ.65 லட்சம் கோடி தாது மணல் கொள்ளை, ரூ. 5 லட்சம் கோடி கிரானைட் கொள்ளை, ரூ. 52 ஆயிரம் கோடி மின் கொள்முதல் ஊழல், ரூ.25 ஆயிரம் கோடி சிஎம்டிஏ கட்டிட அனுமதி ஊழல்.
ரூ. 2000 கோடி கேபிள் டிவி ஊழல், ரூ. 1000 கோடி தார் கொள்முதல் ஊழல், ரூ. 303 கோடி மருத்துவ காப்பீடு ஊழல், ரூ. 39 கோடி குட்கா ஊழல், துணை வேந்தர் நியமன ஊழல், தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல் உட்பட 24 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளது.
இந்த பட்டியலை வரி வரியாக படித்து, உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாக அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அன்புமணி ராமதாஸ் சந்தித்த பிறகு, ஊழல் பட்டியலை கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலுடன் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் படித்து பார்த்துள்ளாராம்.
ஊழல் குறித்த புள்ளி விவரங்களை பார்த்து ஷாக் ஆன ஆளுநர், ஒவ்வொன்றையும் மார்க் செய்துள்ளாராம். முழுமையாக படித்து பார்த்த பின்னர், இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் உதவியில்லாமல் செய்திருக்க முடியாது.
இதன் மீது நடவடிக்கை எடுத்தால், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள். பிறகு நிர்வாகம் சீராகும் என்று ராஜகோபாலிடம் கூறியிருக்கிறாராம்.
இந்த ஊழல் பட்டியல் குறித்து அரசிடம் விளக்கம் கேட்பதற்கான ஆவனங்களை தயார் செய்யும் படி ஆளுநர் கூறியிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு மீது நடிவடிக்கை எடுக்க அதிகாரம் ஆளுநருக்கு இல்லாவிட்டாலும், உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன்மூலம் விசாரணை ஆணையம் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அதில் அமைச்சர்கள் மட்டுமல்லாது முதல்வரும் சிக்குவார் என்றே கூறப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.