13/12/2017

கடற்கரைகாரன் செத்தா உனக்கென்னடா? நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சிறையிலடைத்த கொல்லங்கோடு போலீஸ்...

                                 
பல நாட்களாக கடலோர கிராமங்களில் தங்கி மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்ட "மக்கள் அதிகாரம்" தோழர்கள் ஏழு பேரை நீரோடியில் வைத்து கைது செய்தனர்.

நீரோடியில் வைத்து கைது செய்து மண்டைகாடு காவல்  நிலையத்தில் வைத்திருந்த தோழர்களிடம் தான்   "கடற்கரைகாரன் செத்தா உனக்கென்னல"?        என்ற கேவலமான கேள்வியை   போலீசார் கேட்டனர்.

ஜல்லிகட்டிற்கும், வர்தா புயலுக்கும் எங்களுக்காக வந்தவர்களுக்காக நாங்க ஏன் வரக்கூடாது? என்று தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்டனர்.     

தோழர்கள் எதிர் கேள்வி கேட்டதற்காக அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி குழித்துறை சிறையில் அடைத்துள்ளது காட்டுமிராண்டி போலீசு.   

கைதாகி நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்,  மூவர் தூத்துக்குடி & நெல்லை மாணவர்கள்,  இருவர் தூத்துக்குடி தொழிலாளர்கள்.               

 குமரி மீனவ மக்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக  மாறி விடாமல்  அச்சுறுத்தி தடுக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கைது, சித்தரவதை.       

பல்வேறு தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் மீனவ மக்களை நோக்கி வருவதே நமது  போராட்டத்தை வலுப்படுத்தும். 
 
புயல் எச்சரிக்கை கொடுக்காமல் நம்மை கொலை செய்த இந்த கொலைகார அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் கோரிக்கை வெல்லும்வரை போராடுவோம். நமக்காக சிறை சென்றவர்களை ஆதரிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.