கீழக்கரையில் இளைஞர்கள் விளையாட்டின் மூலம் கிடைக்கும் பரிசு தொகையினைமுறையான பயனாளிகள், ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர். கீழக்கரையில் உள்ள அஞ்சலக வீதியில் இயங்கி வரும் ஹிதாயத்வாலிபால், கால்பந்து விளையாட்டுக்குழுவில் கல்லுாரி மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.
ஒப்பிலான், மாரியூர், நரிப்பையூர், சித்தார்கோட்டை, அத்தியூத்து, பனைக்குளம், தொண்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தினுள் நடக்கும் இரவு நேர மின்னொளி விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
விளையாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிஷார் அகமது கூறியதாவது...
கிராம ஆண்டுவிழா, பொதுநிகழ்ச்சிகளில் நள்ளிரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 6:00 மணி வரை நடக்கும்மின்னொளி வாலிபால் போட்டிகள் இங்கு நடக்கும். பரிசுத்தொகையாக ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.
இதில் கிடைத்த தொகையினை ஆதரவற்றோர், வறுமையில் வாடும் ஏழைக்குடும்பங்கள், அன்பு இல்லங்களுக்கு நன்கொடையாளர்களின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2014 முதல் இதனை செய்து வருகிறோம்.
ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பொதுசேவைகளில் ஈடுபடுகிறோம். மாதந்தோறும் சந்தா வசூலித்து, புரவலர்களை ஒருங்கிணைத்து, பிறருக்கு வழங்குவதை உற்சாகமாக செய்து வருகிறோம், என்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.