08/02/2018

அமெரிக்காவில் வாழ்பவர் அமெரிக்கர்களா?


அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் கனவுதேசம், வல்லரசு நாடு என்ற மாயை உள்ளது.

ஆனால் உண்மையில் அமெரிக்கா என்பது பல கொடூரங்களை உள்ளடக்கிய நாடு.

உண்மையில் இன்று அந்நாட்டில் நன்றாக வாழ்பவரும் ஆள்பவரும் அமெரிக்கர் அல்ல.

கொலம்பஸ் எனும் கொடூரன் அமெரிக்காவை கண்டு பிடிக்கும் வரையே உண்மையான அமெரிக்க மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்ந்தனர்.

இந்தியாவை கண்டு பிடிக்க எண்ணி திசைமாறி அமெரிக்காவை கண்டு பிடித்தான் கொலம்பஸ்.

ஆனாலும் அதனை இந்தியா என்றே நம்பிய அவன் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்ககளை இந்தியர்கள் என்றே அழைத்தான் (தமிழில் செவ்விந்தியர்கள்).

பின்னர் அவன் மூலமாக உள்நுழைந்த பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் (யூத இனத்தவரும்) நாட்டை ஆக்கிரமிக்க துவங்கினர்.

பூர்வீக அமெரிக்க மக்களை அடிமைகளாக நடத்தினர்.

பழங்குடியினரான பூர்வீக மக்களும் அவர்களை எதிர்க்கவில்லை.

வெள்ளைக்காரன் எங்கு சென்றாலும் வினையுடன்தான் செல்வான் என்பதற்கேற்ப பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடனே பல புது நோய்களையும் கொண்டு வந்தனர்.

இதனால் ஆரோக்கியமாக இருந்த பல பூர்வீக அமெரிக்க மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

ஒருகட்டத்திற்கு மேல் இவர்களின் அடக்கு முறையை தாங்க முடியாத அம்மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

இது American revolution War என அழைக்கப்படுகிறது.

இதன் பின் பலமுறை பூர்வீக மக்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக போராடினர்.

இதில் பல்லாயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

1776ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

ஆட்சி செய்தவனும் பிரிட்டிஷ் யூதன் வாழ்பவனும் ஆங்கிலேயன், இதில் என்ன சுதந்திரம் என்பது வினோதமே.

ஆனாலும் பூர்வீக அமெரிக்கர்கள் அடிமைகளாகவே இருந்தனர்.

பல புரட்சிகளுக்கு பிறகு 1838ல் பூர்வீக மக்களை வந்தேறி வெள்ளையர்கள் மிஸ்ஸிசிப்பி நதியின் மேற்கு கரையோரம் நோக்கி விரட்டியடித்தனர்.

உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட அம்மக்கள் குடிபெயர்ந்தனர்.

அதில் பல்லாயிரம் மக்கள் குளிரிலும் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர்.

இச்சம்பவம் Trails of Tears என அழைக்கப்படுகிறது.

இப்போதும் அந்நாட்டில் வாழும் பூர்வீக மக்களின் வம்சாவளியினர் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்றே பட்டியல் வகுப்பினராக உள்ளளனர்.

பலர் இன்னும் அரசால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளனர்.

பூர்வீக மக்களை அழித்துவிட்டு வந்தேறிகளால் ஆளப்படும் நாட்டை எப்படி வல்லரசு என ஏற்றுக் கொள்ள முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.