உச்ச நீதிமன்றத்தில் நாடு முழுவதும் உள்ள திடக் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்த வழக்குகள் நடைபெற்று வருகின்றது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் 845 பக்க அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்று நடைபெற்றது.
மத்திய அரசு தாக்கல் செய்த 845 பக்க அபிடவிட்டில் வழக்கிற்கு சம்பந்தமான போதிய தகவல் இல்லை என்பதால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம்.. உங்களிடம் உள்ள குப்பைகளை எங்களிடம் கொட்டுகின்றீர்களா ? நாங்கள் ஒன்னும் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை, நீங்கள் என்ன நினைத்து கொண்டீர்கள் அதிக அளவு பக்கங்கள் கொண்ட அறிக்கைகளை கொடுத்த எங்களை இம்ரஸ் செய்ய பார்க்கின்றீர்களா நாங்கள் இப்ரஸ் ஆகவில்லை இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக் கூறி மத்திய அரசின் அபிடவிட் ஐ ஏற்க மறுத்து தெளிவான விபரங்களுடன் மீண்டும் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.