12/03/2018

ஆதாம் என்ற தமிழன் - ஒரு வரலாற்று ஆய்வு : 2 - தொடர்ச்சி...


இன்னும் மேலாக, கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.

“தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)

இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்) என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள் என்றும்,

மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண் (மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம் கருதலாம் தானே.

மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…

மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்… அதாவது,

ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்

விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

சரி… மனிதன் பிறந்து விட்டான்… தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக் கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்…

உலகினை அழிக்க வெள்ளம் தயாராக இருக்கின்றது… அதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….

வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன் அதோ நிற்கின்றார்…

நோவாவை சந்திப்போம்… அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.