உங்க குழந்தையை LKG வகுப்பில் சேர்க்கணுமா?
பெங்களூர் பள்ளியில் கட்டணம் ரொம்ப அதிகமில்லை... வெறும் 2லட்சத்தி 2ஆயிரம் மட்டுமே...
உங்கள் வசதிக்காக சில விவரங்களை மட்டும் தமிழில் தெரிவித்துள்ளோம்.
பள்ளியிலேயே டியூசன் கட்டணம் - ரூ.39,830 (பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் 79,660 மட்டுமே) என்ன கொடும சார் இது?
பள்ளி கட்டிட கட்டணம் - ரூ.42,500 என்ன இது வாடகையா?
பள்ளி கட்டிட மேம்பாட்டு கட்டணம் - ரூ.62,500 என்ன இது மீண்டும் வாடகையா? 2.0Version?
பள்ளி உதிரிபாகங்கள் சரிசெய்ய கட்டணம் - ரூ.10,000 என்னடா நடக்குது அப்படி?
LKG கிறிஸ்துமஸ் கட்டணம் - ரூ.825 கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.
கிறிஸ்துமஸ் மதிய சாப்பாடு - ரூ.300 காஞ்சு போன கேக்குக்கு.
இதெல்லாம் உங்க குழந்தையை சேர்க்கும் போது லம்ப்ப்பா உடனே கட்டணும்....
பள்ளியில் சேர்த்தபின் அவ்வப்போது குழந்தையின் டைரியில் எழுதி அனுப்புவோம், அதற்கு எந்த கேள்வியும் கேட்காமல் மூடிக்கிட்டு வந்து காசை மட்டும் கட்டிட்டு போகணும்....
இது இல்லாம சீருடை, ஹாஸ்டல், பள்ளி பேருந்து, மாணவர்கள் சுற்றுலா ஆகியவற்றிற்கு கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.