நான் பல முறை நண்பர்களிடம் பேசும் போது டான்சானியா நாட்டில் பாரம்பரிய விதை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம், அது போல இங்கு விரைவில் கொண்டு வந்து நம் பாரம்பரிய விதையை முடக்குவார்கள் என்று கூறினேன், அது இன்று வேறு வடிவில் வந்து விட்டது.
ஒரு சிலர் பாரம்பரிய விதைகளை கொண்டு விவசாயம் செய்கிறார்கள், மரபணு மாற்று விதைகளின் சிக்கல் தெரிந்த பலர் இயற்கை, பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுகிறார்கள். இது சமீப காலத்தில் மிகவேகமாக இளைஞர் மத்தியில் பரவி பலர் வெளிநாடு வேலைகளை விட்டுவிட்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதை இப்படியே விட்டால் காலப்போக்கில் எல்லாம் இயற்கை மயமாகிவிடும், நிறுவனங்கள் எங்கு விதை விற்பது, அவனுடைய மூலாதாரத்தையே ஆட்டி பார்க்கும் செயலாக மாறிவிடும்.
அதன் பின்னணியில் உள்ள சதியே இந்த விற்பனை தடை. ஒரு விவசாயியிடம் இருந்து இன்னொருவர் விதை வாங்கி பயிர் செய்ய முடியாது. விரைவில் விதைகள் அழிந்து தற்சார்பு விவசாயம் அழியும் நிலை வரும்.
ஜல்லிக்கட்டு ஒரு வித விதை அழிப்பே
இதுவும் அதன் வகையையே சாரும்
குழந்தைகூட இனி நிறுவன உதவியோடு தான் பெற முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்படுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.