கடவுள் என்பது மகா ஆற்றல்களை கொண்ட வெறும் சாட்சித்தன்மை மட்டுமே. நம் வாழ்க்கையில் அவர் எந்த வகையிலும் எந்த செயலையும் செய்வதில்லை.
நாம்தான் நம் எண்ணங்களின் ஊடே நம் வாழ்வை தீர்மானிக்கிறோம். அவர் நம் எல்லா சிந்தனைகளுக்கும் ஆற்றல் அளித்து அதை செயல்படுத்துபவர் மட்டுமே.
ஏனெனில் அவர்தான் உங்கள் வடிவில் அனைத்து அனுபவங்களையும் பெறுகிறார்.
நாம் சிந்தனை உலகில் வாழ்கிறோம். உங்கள் ஆழ்மனத்தின் எண்ணங்கள் அனைத்தையும் உங்கள் மனம் கடவுள் என்கிற சக்தியால் வடிவமைத்து தந்துவிடும்.
கடவுள் மனிதனில்தான் நல்ல செயல் நிலையில் உள்ளார். கடவுள் தன் உணர்வுநிலையை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்றுதான் நாம்.
நமக்கு எல்லோருக்கும் வெவ்வேறு மனங்கள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு மனம்தான் உள்ளது. அதுதான் கடவுளின் மனம்(ஆழ்மனம்).
கடவுளுக்கு எல்லாம் தெரியும். அதனிடம் நம்பிக்கையோடு வேண்டுங்கள். அது நிச்சயம் கொடுக்கும். ஆனால் உங்கள் வேண்டுதலில் உயிர்ப்பு இருக்க வேண்டும்.
அதேபோல் உங்கள் பிரார்த்தனையின் அர்த்தம் அறிந்து வேண்டுங்கள். வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.
பின்பு அது உங்களுக்கு கிடைக்கும் விதத்தை கண்டு பிரமித்து போவீர்கள். ஆம் கடவுள் நீங்கள் கேட்டதை கொடுக்கும் வல்லைமை படைத்தவர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.