உயிர்வாழ வேண்டும் என விரும்பும் எனது இயற்கையான விருப்பத்தை மறைக்க எதுமில்லை. ஆனால் நான் உயிர்வாழ்வது சில வரையறைகளுக்குற்பட்டது.
பரோலிலோ அல்லது சிறையிலோ வாழ்வதற்க்கு எனக்கு விருப்பமில்லை. புரட்சிகர அமைப்புகளின் குவிமையமாக இன்று நானிருக்கிறேன். அதன் தியாகங்கள் என்னை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன. இந்த இடம் மிக உயர்ந்தது, எந்தளவுக்கு என்றால் ஒருவேளை நான் உயிருடன் மீண்டு வந்தால், அந்த உயர்ந்த மதிப்பிற்க்கு தகுதியாக நான் வாழ்வது சந்தேகமே. தற்பொழுது எனது பல்கீனங்கள் மக்களுக்கு தெரியாது, ஆனால் தூக்குமேடையை என்னால் ஏமாற்ற முடிந்தால், ஒரு நாள் எனது பலகீனங்கள் வெளி தெரிந்து விடும். எதிர்காலத்தில் எனது புரட்சிகர மன உணர்வு குன்றலாம், அது அணைந்தும் கூட போகலாம்.
ஆனால், ஒரு வீரனைப் போல முகத்தில் புன்னகை வழிய இப்பொழுது தூக்கிலிடப்பட்டால், காலாகலத்திற்க்கும் இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகளையும் கூட எனது எடுத்துக்காட்டை பின்பற்றச் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். எங்களை தூக்கில் போடுவது, விடுதலை வேள்வியில் மலரும் மலர்களின் எண்ணீக்கையை அதிகப்படுத்தும். அதன் அளவு எந்தளவுக்கு இருக்குமென்றால், இனிமேலும் ஏகாதிபத்திய சாத்தான்களால் புரட்சியை எதிர்த்து நிற்க்க முடியாது என்ற அளவில் இருக்கும்…
- பகத்சிங்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.