11/03/2018

ஊட்டத்தூர் சுற்றிஉள்ள கல் குவாரியில பாேடுற வெடி பத்தி ஏன் யாருமே பேச மாட்றாங்க... அளவுக்கு அதிகமான அதி்ர்வுகள்...


வீடுகள் எல்லாம் சீக்கிரமே சேதமாகிறது... சாலைகள் சேதம் அடைகின்றன இதை தடுக்க தடை செய்ய வழியே இல்லயா...

புகழ் பெற்ற சுத்தரத்தினேஸ்வரர் சிவன் ஆலயமும் , ஆலய கோபுரமும் குவாரி வெடியால் மிக அதிகமான அதிர்வுகளை உண்டாக்குகின்றன.

அதிர்வுகளால் குழந்தைகளும் வயதான பெரியவர்களும் கர்ப்பிணி பெண்களும் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

ஒரு சிலர் பணம் ஈட்ட ஊரார் எல்லாேரும் ஏன் கஷ்டப்பட வேண்டும்..

வீட்டின் ஆயுட்காலம் அடியாேடு சேதமடைகிறது..

அதிர்வினால் சப்தத்தினால் குழந்தைகளும், விலங்குகளும் பெருமளவில் பயப்படுகின்றன.

ஊரின் வளம் சுரண்டப்படுகிறது.ஊரின் நிலத்தடி நீர் பாதிக்க பட்டு வருகின்றது ,15 அடியீல் இருந்த நிலத்தடி நீர் இன்று 150 அடிக்கு போய்விட்டது விவசாய நிலங்கள் நீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.

ஊரின் சிறப்பு மலையும் மலை சார்ந்த இடமாக இருந்தது இப்போது ஒரு மலை கூட இல்லை .அனைத்தும் கல்குவாரி காரர்கள் மூலம் சுரண்ட பட்டு விட்டது.

அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பணத்தினால் வாயடைக்கப் பட்டுள்ளனர்..

ஆக்கப்பூர்வமான சிந்தனையுள்ள இளைஞர் படைகள் இதனை தடை செய்ய ஆவன செய்ய வேண்டுகிறோம்.

நந்தி ஆறு இப்ப வறண்ட ஆறு
ஊட்டத்தூர் (ஊற்றத்தூர்) ஊற்று அதிகம் உள்ள ஊர் இப்ப தண்ணீர் இல்லாத ஊராக மாறிக்கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் ஊரை சுற்றி உள்ள 4 ,5 கல் குவாரிகள் , நான்கு திசைகளிலும் செயல் படும் கல்குவாரிகள்தான் காரணம்.

வேதனையுடன் நன்றி.

இப்படிக்கு,
ஊட்டத்தூர் கிராம பொது மக்கள். லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.621109...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.