16/03/2018

கவலை மாற...


கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும், கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவாதைகள் குடிகொள்ளாது..

அதனால் தான் முன்னோடிகள் ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள்..

ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும்..

ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது..

எனவே மனதில் தெய்வ தேவாதைகளுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல..

கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்கvமுடியாது , எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும், ஜெயம் உண்டாகும்..

கவலையில்லாத மனிதன் யாருமே இல்லை தான்..

கடந்தகால கவலை. நிகழ்கால கவலை. வருங்கால கவலை. இந்த மூன்று கவலையில் ஏதாவது ஒரு கவலையில் மனிதன் வாழ்கிறான்..

இதில் எதிலுமே கவலை இல்லாதவன் வாழ தகுதி அற்றவன் என சாஸ்திரம் கூறுகிறது..

எனினும் லட்சியக் கவலை இருக்கலாமே தவிர. வீண்கவலை இருக்க கூடாது.

அக்காலத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஆசையை அழித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மன்னர்களெல்லாம் போர்க்களம் செல்லும் போது உயிர் மேல் ஆசை வைக்காமல் சென்றவர்கள் அவர்களெல்லாம் கூட வெற்றி பெற அது ஒன்றே காரணம் என வரலாறு கூறுகிறது.

வெற்றி என்ற லட்சிய கவலையை ஆயுதமாக கொண்டு வெற்றி பெற்றவர்கள் அவர்கள்..

தாங்களும் நம்பிக்கையும். விடா முயற்சியையும் கேடயமாக கொண்டு அன்பை ஆயுதமாக கொண்டு முயற்சியுங்கள் வெற்றி உண்டு.

நமக்கு இருப்பது ஒரு மனம் அதை கவலைக்காக இடம் ஒதுக்கிவிட்டால் தெய்வத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் உணர்வீராக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.