25/04/2018

சிறுவனைக் காதலித்த 140 வயது ஆவி...


டெக்சாஸில் கானாக் என்ற நகரில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஜெட் ஜோன்ஸ். ஒரு நாள் இவன் படுக்கையறையில் படுத்துக் கொண்டிருந்த போது 19வயது மதிக்கத்தக்க அழகிய இளம் பெண் அங்கு காணப்பட்டாள். துய்மையான வெண்மை உடை உடுத்திருந்த அவள் ஜெட் என்று மிக அன்பாக அவனை அழைத்தாள்.

வியப்பும் பயமும் அடைந்த ஜெட் யார் நீ? என் பெயர் உனக்கு எப்படி தெரியும்? இங்கு எப்படி வந்தாய் என்று கேட்டான். அந்த ஆவி அவன் மீது அன்பை பொழிந்து அவன் அச்சத்தை நீக்கியது. என் பெயர் யூனிஸ் ஆண்ட்ரூஸ். நான் இந்த வீட்டில் இறந்து 140 ஆண்டுகள் ஆகிறது.எனவே உன்னை எனக்கு நன்கு தெரியும் என்ற ஆவி மேலும் வீட்டின் மீது இடி விழுந்து குளிர் காயும் அனல் அடுப்பின் மீது நான் விழுந்து கருகி என்னுடைய 19வது வயதில் காலமானேன் என்றும் தன்னுடைய மரணத்தை பற்றி விவரித்தது.

இது பற்றி ஜெட் கூறுகையில் யூனியை நான் இளம் பெண்ணாகவே காண்கிறேன். திரைப்படத்தில் வருவது போல் அவள் மிதப்பதில்லை. அவள் என் அருகே வரும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. நான் வீட்டை விட்டு வெளியேறினால் தான் அவள் உருவம் மறைகிறது. அதுவரை கூடவே இருக்கிறது என்று கூறுகிறான்.

ஒரு முறை ஜெட் ஒரு கார் விபத்தில் அடிபட்டு முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது. வீட்டில் உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்நது. அமைதியை விரும்பிய ஜெட் தன் தனியறைக்குச் சென்று விட்டான்.

அங்கு அவனுக்காகவே யூனிஸ் காத்திருந்தாள். இவனை கண்ட ஆவி மனம் பதைத்தது. நான் எச்சரிக்கும் முன்பாகவே நீ புறப்பட்டு விட்டாய் இனி நீ வெளியே செல்லாதே. நீ இங்கே இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறிய ஆவி அவனை அப்படியே அணைத்துக் கொண்டது.

அந்த நேரத்தில் யூனிஸின் கை ஐஸ் கட்டியைப் போல் குளிர்ச்சியாக இருந்ததாம்.

கண்களுக்குத் தெரிந்து நல்லது செய்கின்ற ஆவிகளைப் போலவே கண்களுக்குப் புலப்படாமல் சேட்டை செய்கின்ற ஆவிகளும் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.