முப்பத்தி ரண்டு முழம்உளமுப்
பனையைத்
தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்
சாணேறி நான்கு விரற்கிழியும்
என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து...
ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒருநாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?
விளக்கம்...
முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்.
12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம் ஆனது 32*24=768 விரற்கடை ஆகும்.
பச்சோந்தி நாள் ஒன்றுக்கு 12 விரற்கடை ( 1 சாண்,2 விரற்கிடை = 1 பெருவிரல்) ஏறி நாலு விரற்கடை கீழிறங்குகிறது.
எனவே அது ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.
பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
768/8 =96.
ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்.
சும்மவே இருக்க மாட்டிங்களா?
ஏன் என் வாய கிளறுறிங்க?
எனக்கு நாக்குவேற நீளம்
அன்புடன்,
நீளநாக்கு பச்சோந்தி...
Risk of pesticide exposure for reptile species in the European Union...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.