25/04/2018

Petrol - Diesel - உண்மையில் யார் விலை நிர்ணயம் செய்கிறார்கள் யார் ஏமாளிகள் என்று தெரிய இதை படித்து புரிந்து விழித்து கொள்...


முதலில் 1 லிட்டர் பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இன்றைய (24.04.2018) கச்சா எண்ணெய் விலை (By Indian Basket) - 71.33 $ ஒரு பேரலுக்கு. ஒரு பேரல் என்பது 159 லிட்டர். இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு, 66.55 ரூபாய் 1 டாலருக்கு.

இப்படியாக அசல் விலை ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் - 29.77 ரூபாய். (கொள்முதல் விலை)

இதில் பெட்ரோல் பிரித்தெடுக்கவும், இறக்குமதி செய்யவும் ஒரு லிட்டருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் விதிக்கும் தொகை - 4.75 ரூபாய், ஒரு லிட்டருக்கு. (டீசலுக்கு 7.5 ரூபாய்)

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் முதலிய OMC நிறுவனங்கள் விதிக்கும் தொகை - 3.31 ரூபாய் ஒரு லிட்டருக்கு.

இப்படியாக 37.83 ரூபாய்தான் விற்பனை விலை, இன்றைய விலைக்கு.

இனிதான் நம் மத்திய அரசு வரிகள் வருகிறது. நம் இந்திய அரசு, சதவிகித அடிப்படையில் இல்லாமல், ஒரு தொகையை மொத்தமாக நிர்ணயித்து விட்டது. மொத்தம் 19.48 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி. (டீசலுக்கு 15.33 ரூபாய்) எனவே இன்றைய பெட்ரோல் விலையில் சுமார் 51.5% மத்திய அரசு வரி வசூலித்து விலையேற்றி விடுகிறது.

அதன் பிறகு பெட்ரோல் பம்ப், அதாவது நமக்கு நேரடியாக விற்பனை செய்யும் டீலர்களுக்கு, 3.59 ரூபாய் ஒரு லிட்டருக்கு. (டீசலுக்கு 2.51ரூபாய்) இப்போது விற்பனை விலை, 60.9 ரூபாய்

நம் தமிழ்நாட்டின் வரி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27% இருந்தது, அதை நம் வாழும் கடவுள் பழனிச்சாமி அவர்கள் 34% ஆக உயர்த்தினார்கள். அதன்படி மேலே சொன்ன ரூபாய்க்கு எவ்வளவு வரி வருகிறதோ, அதுதான் நம் தமிழக அரசின் வரி. 16.44 ரூபாய் ஒரு லிட்டருக்கு.

இறுதியாக இன்றைய நமக்கு கிடைக்கும் பெட்ரோல் விலை - 77.34 ரூபாய்.

இதில் தில்லுமுல்லு எங்கே நடக்கிறது? If Central Govt, ஒருவேளை மத்திய அரசும், மாநில அரசைப்போலவே இத்தனை சதவிகிதம் என்று நிர்ணயித்திருந்தால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது நமக்கு கிடைத்திருக்க வேண்டிய விலையும் குறைந்திருக்கும்.

உதாரணம், ஜூன் 2017 மாதம், கச்சா எண்ணெய் விலை 45$ மட்டுமே. அன்றைய தொகைக்கு மேலே சொன்ன வழிமுறைப்படி விற்ற விலை 71 ரூபாய். மத்திய அரசு சதவிகிதப்படி வரி விதித்திருந்தால் விற்றிருக்கக்கூடிய விலை 50 ரூபாய் மட்டுமே. இப்படி மத்திய அரசால் மக்களுக்கு ஏற்றப்படும் வரிச்சுமை எவ்வளவு என்று கணக்கிட்டேன்.

நாள் ஒன்றுக்கு, இந்தியாவில் 60 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் (டீசல், பெட்ரோல் & கேஸ்) செலவாகிறது. இதில் தோராயமாக 18 ரூபாய் என்று 1 லிட்டருக்கு வரி என்றாலும், மத்திய அரசுக்கு 1000-1200 கோடி ரூபாய் வருமானம். ஒரு மாதத்திற்கு 35000-37000 கோடி ரூபாய் வருமானம். இதுவே தமிழகத்தில் நாளொன்றுக்கு 5 கோடி லிட்டர். எனவே நாளொன்றுக்கு 60-80 கோடி ரூபாய் வருமானம். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1000 கோடி ரூபாய் வருமானம் இந்திய அரசிற்கு நாம் பெட்ரோல் உபயோகிப்பதால் கிடைக்கிறது.

தினம் 100 ரூபாய்க்கு Petrol உபயோகிக்கும் ஒவ்வொருவருடைய காசிலும் இருந்து,  25 ரூபாய் மத்திய அரசுக்கும், 21 ரூபாய் தமிழக அரசுக்கும், 6 ரூபாய் ரிலையன்ஸுக்கும், 5 ரூபாய் HP, BP, Indian Oil போன்ற கம்பெனிகளுக்கும், 4 ரூபாய் பெட்ரோல் பங்க் ஓனருக்கும், மீதி கச்சா எண்ணெய்க்கும் போகிறது.

எனவே இந்திய அரசு சதவிகிதத்தின் படி வரி அமைத்தால் கட்டாயம் குறைந்த பட்சமாக 10-15 ரூபாயாவது விலை குறையும் என்பதுதான் இதில் தெரியவரும் தகவல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.