29/04/2018

சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் தீ விபத்து -20 கடைகள் எரிந்து சாம்பல்...


சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் நடைபாதைக் கடைகள் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகி நாசமாகின. சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் எனுமிடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்தக் கடைகள் யாவும் தீயில் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சாம்பலாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.