23/04/2018

ஏப்ரல் 25 முதல் 29 வரை தமிழகம் தழுவிய இரு சக்கர வாகன பரப்புரை பயணம்...


மே 1 முதல் சென்னை சென்டரல் முதல் திரு வெற்றியூர் வரை தொடர் ரயில் மறியல் பி.ஆர்.பாண்டியன்.

திருச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டம் திருச்சியில் மாநில கவுரவ தலைவர் தீட்சிதர் பாலு தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ஹேமநாதன் வரவேற்றார்.

தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்பு உச்சக்கட்டப் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள் , விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் என அனைவரும் ஒன்றினைந்து போராடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க பிரித்தாலும் சதி திட்டத்தில் ஒரு சில தலைவர்களை ஈடுபட்டுத்தி வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் பாஜகவின் சதியை முறியடிக்க காவிரி போராட்டத்தை ஒன்றுபட்டு தீவிரப்படுத்த வேண்டுகிறோம்.

வருகிற 25ந் தேதி முதல் 100 கணக்கான இரு சக்கர வாகனங்கள் மூலம் பரப்புரை பயணத்தை உப்பு சத்யாகிரகப் போராட்டத்தை துவக்கிய வேதாரண்யத்திலிருந்து துவங்கி தஞ்சாவூர், கல்லனை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், மேட்டூர், தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம்,சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் ,நாகப்பட்டினம் வழியாக 29 ல் மனுநீதி சோழன் நீதி கேட்ட திருவாரூர் நகரத்தில் நிறைவு பெறுகிறது.

இப் பயனத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அரசு உடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராவிட்டால் அமைக்கும் வரை மே 1ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முதல் திருவெற்றியூர் வரை ரயில் பாதையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், இளை ஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதிலி மிகுந்து பங்கேற்கும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் பொது செயலாளர் பாலாறு வெங்கடேசன், பொருளாளர் நாகை ஸ்ரீதர்.மாநில துணை தலைவர் தஞ்சை என்.அண்ணாதுரை
மாநில துணை செயலாளர் தேனீ செங்குட்டுவன், புலியூர் நாகராஜன், தஞ்சை புண்ணியமூர்த்தி, மண்டல தலைவர்கள் மதுரை ஆதிமூலம், தர்மபுரி சின்னசாமி, தஞ்சை டி பி .கே.இராஜேந்திரன், திருச்சி வயலூர் இராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் சிவகங்கை முருகன்., மதுரை மேலூர் அருன் , தேனி திருப்பதி வாசன், வி.எம்.பாரூக், சபா, அறிவு
உள்ளிட்ட முன்னனி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.