தமிழ்நாட்ல புது சினிமா ரிலீஸ் ஆயி 50 நாள் ஆச்சு.. நாட்ல புதுப்படம் பாக்காம யார் குடியும் மூழ்கிப் போயிடல.. மொத்தத்துல, புதுப்படம் ரிலீசாவாதது ஜனங்களுக்கு பெரிய பிரச்சினையாவே தெரியலை..
ஜனங்களே, இதே சாந்தமான புத்தியோட, புதுப்படங்க ரிலீஸ் ஆகி கொள்ளை விலை டிக்கெட் வித்தா போய் பாக்காதீங்க. கொஞ்ச நாள் கண்டுக்காம கதறவுடுங்க..
முதல்ல, தியேட்டர்காரன் பேந்த பேந்த முழிப்பான்.. அப்புறம் தேவையில்லா கோடிக்கணக்கில் பணத்தை கட்டி குப்பை குப்பையா படம் எடுக்கிறவன், போட்ட டப்பு திரும்ப கிடைக்காதேன்னு யோசிப்பான்.
அப்புறம் கோடி கோடியா சம்பளம் கேட்டு பந்தா பண்ற ஹீரோவுங்க எங்கே போவாங்க? ஹாலிவுட்டுக்கா?
அரிசி விலை ஏறுனா கத்தலாம். ஆனா ஆட்டுக்கறி விலை ஏறுனா வெல்லாம் கத்தக்கூடாது.. ஆட்டுக்கறி சாப்பிடலைன்னா செத்தா போய்விடுவோம். வாங்காமா விட்டா, கறி விலை தானா குறையப்போவுது..
சாமான்ய மக்களுக்கான டிக்கெட் விலை சாத்தியமாகும் வரை காத்திருந்தாலே போதுமானது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.