கடந்த பாகத்தில் நியூட்ரினோ பற்றி அறிவியல் ரீதியாக பார்த்தோம்..
இனி தமிழ் நாட்டில் நிறுவ இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் பற்றி கொஞ்சம் அரசியல் ரீதியாக பார்ப்போம்.
இங்கே நமது கட்டுரை அறிவியல் கட்டுரையில் இருந்து சமூக கட்டுரையாக மாறுகிறது ..
மற்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வகங்கள் இல்லையா ?? இருக்கிறது இல்லாமல் இல்லை. ஆனால் அவைகள் இப்படி நாட்டுக்கு நடுவில் இல்லை.
உதாரணமாக அமெரிக்காவின் the University of Wisconsin சார்பாக
"The IceCube " எனும் பெயரிட பட்டுள்ள Neutrino Observatory எங்கே நிறுவ பட்டுள்ளது தெரியுமா ?
அண்டார்டிகாவில்... தென் முனையில்..
மனித சஞ்சாரமற்ற இடத்தில்.
அங்கே வருடத்தில் சில மாதங்களே வெயில் இருக்கும் குறிபிட்ட மாதத்தில் சென்று தான் அந்த லேப் ஐ நிறுவினார்.
(முன்பு சொன்னது போல ஆரம்ப கால பிரபஞ்சம் மற்றும் டார்க் மேட்டர் பிளாக் ஹோல் பற்றி எல்லாம் ஆராய்வது இந்த லேபின் நோக்கம்.)
ANTARES என்று ஒரு ஆய்வகம் (கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டேன் பாருங்க 6 வருடமா ஒன்னையும் பிடிகல னு ) அது எங்கே இருக்கிறது என்றால் France இல் Toulon coast இல் 2.5 கிலோ மீட்டர் கடலுக்கு உள்ளே.
அடுத்ததாக INO . அதாவது India-based Neutrino Observatory .
இது ஒரு particle physics research project இது தான் தேனி மலையில் அமைய இருக்கும் ஆய்வகம்.
முதலில் இது தமிழ் நாட்டில் நுழைந்த வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.
முதலில் இது 2015 யிலேயே 1500 கோடி ப்ராஜெக்ட் இல் முடிந்து இருக்க வேண்டிய திட்டம் இது.
முதல் முதலில் 1989 ஆண்டு இதற்கான பிள்ளையார் சுழி போட பட்டு அந்த ஆண்டில் பல மீட்டிங் நடத்த பட்டது.
ஆனால் உறுதியாக முடிவு செய்ய பட்டது 2000 இல் சென்னையில் நடந்த WHEPP (workshop on high energy physics phenomenology ) எனும் workshop இல் .
Neutrino physics மற்றும் Cosmology working குழு இதை உறுதி செய்தார்கள்.
பிறகு அதே ஆண்டில் கல்கத்தாவில் ஒரு மீட்டிங் நடந்த பின் 2001 இல் மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் INO வின் collaboration கள் முடிவு செய்ய பட்டன.
குழுக்கள் இணை துணை குழுக்கள் முடிவு செய்ய பட்டன.
ஒருவழியாக பல research institutes, universities, மற்றும் scientific community funding agency, Department of Atomic Energy, இவைகள் எல்லாம் இனைந்த Neutrino Collaboration Group (NCG) ஒரு India-based Neutrino Observatory (INO)வை வடிவமைத்தார்கள் இவர்களின் முக்கிய நோக்கம் ஒரு underground neutrino laboratory அமைப்பது.
அதன் மூலம் நியூட்ரினோ மற்றும் இதர பிஸிக்ஸ் ஆய்வுகளை செய்ய ஒரு பாதுகாப்பான அண்டர்கிரவுண்ட் ஆய்வகம் அமைப்பது
முதல் முதலில் இதற்க்கு ஒதுக்க பட்ட இடம் நீலகிரி யில் உள்ள சிங்கரா .
நவம்பர் 20.. 2009 இல் Environment மினிஸ்டர் ஆக இருந்த Jairam Ramesh
என்பவர் Atomic Energy துறையின் Chairman, anil kakodkar க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் இது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருபதால் மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கே ஆய்வகம் அமைக்க அனுமதி மறுக்க படுகிறது என்றார். ஆனால் அதற்க்கு பதிலாக அவர் தேனி மலையில் சுருளி அருவி அமைந்துள்ள பகுதியை சிபாரிசு செய்தார் . அங்கே சுற்றுசூழல் மற்றும் வன துறையில் அனுமதி வாங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று சுட்டி காட்டினார்
18 October 2010, இல் Ministry of Environment & Forests ஆனது...
environment மற்றும் forest இரண்டுக்குமான அனுமதி கொடுத்தது.
இப்படியாக தேனி மாவட்டத்தில் போடி மேற்கு மலைகளில் உள்ள Reserved Forest இல் ஆய்வகம் அமைக்க இடம் குறிக்க பட்டு உறுதி செய்ய பட்டது.
பிறகு 2012 இல் INO க்கு காட்டில் இடம் ஒதுக்க பட்டது. முதல் ஒதுக்கீடாக 66 கோடி ஒதுக்க பட்டது. திட்டத்தின் முதல்
செயல்பாடாக ராசிங்காபுரத்தையும் பொட்டிபுரத்தையும் இணைக்கும் சாலை போட பட்டது. இந்த திட்டம் 1500 கோடியில் 2015 இல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்க பட்டது.
ஆனால்... 18 செப்டம்பர் 2012 இல்
கேரளா சென்ட்ரல் கமிட்டி மெம்பர் v.s அச்சுதானந்தம் என்பவர் தேனி இடுக்கி எல்லை தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையில் சுற்றுசூழல் மற்றும் ரெடியோலாஜி பிரச்னையை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் முன்வைத்த அணைத்து பிரச்சனைகளுக்கும் விளக்கத்தை INO தனது வெப்சைட்டில் வெளியிட்டது.
அதன் பின் 5 January 2015, பிரதமர் மோடி தலைமையிலான யூனியன் கேபினட் குழு INO வுக்கு முழு அனுமதி வழங்கியது.
ஆனால் அடுத்த மாதமே The southern bench of National Green Tribunal .அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசுக்கு சுற்று சூழல் அனுமதி அளிக்க பட்டத்தை கண்டித்து ஒரு பெட்டிஷன் ஒன்றை அனுப்பி வைத்தது.
அப்படியே அதற்க்கு அடுத்த மாதம் மார்ச் 26 .. 2015 இல் மெட்ராஸ் ஹைகோர்ட்டின் மதுரை பெஞ்ச் தனது எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்து.. நீதி மன்றம் மத்திய அரசை Tamil Nadu Pollution Control Board (TNPCB) இடம் இருந்து அனுமதி வாங்க சொல்லி உத்தரவு இட்டது.
Environmental Impact Assessment” (EIA)
மூலம் catagiry" B " யின் அடிப்படையில் அந்த அனுமதி எளிமையாக வாங்கியது INO.
(catagiry A என்பது மத்திய அரசிடமும் B என்பது மாநில அரசிடமும் அனுமதி பெற வேண்டிய திட்டங்களை குறிக்கும் )
இப்போதைக்கு அனைத்தும் தாயார்..
இங்கே என்ன ஆய்வு செய்ய போகிறார்கள் ?
முன்பு குறிப்பிட்டதை போல நியூட்ரினோ களில் எப்படி எடை உண்டாகிறது என்ற ஆய்வு தொடங்கி நியூட்ரினோ ஆஸ்கிலேசன்..Study of charge-conjugation ...charge parity violation possible charge-conjugation, parity, time-reversal என்று பல வகை ஆய்வுகள் மற்றும் இயற்பியலில் பல வகை சோதனைகள் செய்ய இருக்கிறார்கள்.
பொதுவாக அட்மாஸ்பியர் நியூட்ரினோ என்று நமக்கு இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோவை ஆராய 1200 மீட்டர் ஆழம் கொண்ட அண்டர்கிரவுண்ட் குகைகள் தேவை.
தேனி திட்டத்தில் 31.44 ஹெக்டர் இடம் பயன்படுத்த படும் (அதில் 26.8 ஹெக்டர் வெளியிலும் 4.6 ஹெக்டர் நிலத்தடி யிலும் அமைக்க படும் )
underground project இல் 3 குகை அமைப்புகளாக செயல் படும் அதில் முக்கிய குகை அமைப்பு 50 ஆயிரம் டன் காந்தமாக்கம் செய்ய பட்ட இரும்பை பயன்படுத்தி நியூட்ரினோவை பிடிக்கும் அயன் கலோரி மீட்டர் ஐ செய்வார்கள்.
(இது வரை உலகத்திலேயே உள்ள மிக பெரிய காந்தம் CERN இல் இருக்கும் Compact Muon Solenoid (CMS) detector’s magnet ஆகும் ஆனால் தேனியில் அமைக்க பட போகும் காந்த அமைப்பு இதை விட 4 மடங்கு பெரியது )
முக்கிய குகை 130 மீட்டர் நீளம் 26 மீட்டர் அகலம் மற்றும் 30 மீட்டர் உயரம் கொண்டு இருக்கும். இதை தவிர மேலும் இரண்டு துணை குகை அமைப்பு neutrino double detector ஆக செயல் படும் மற்றும் dark matters களை ஆராயும். இந்த மொத்தம் அமைப்பிற்கு 2 கிலோ மீட்டர் குகை அமைப்பு தேவை படும்.
இப்போ மேலே சொன்ன அமைப்பை உண்டாக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி வரும் யோசியுங்கள் . மலையில் சாலை போடவும் மலையில் குடையவும் 50 ஆயிரம் டன் வெடி மருந்தை பயன்படுத்த இருக்கிறார்கள்.
இன்னோரு கணக்கு படி
8 லட்சம் டன் பாறைகளை தகர்த்து எடுக்க 1 லட்சம் டன் ஜெலட்டின் தேவை படலாம் என்கிறார்கள் . இவைகள் 2..3 ஆண்டுகள் தொடர்ந்து நடக்க இருக்கும் கட்டுமானம்.
வெடியில் மற்றும் ட்ரிலிங்கால் பெரும் அதிர்வுகள் உண்டாகும்
இதனால் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் முல்லை பெரியாறு அணையில் விரிசல் உண்டாகும் சாத்தியம் அதிகம் . இந்த அணையில் நீர்மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிபிட தக்கது.(முல்லை பெரியாறு அணை நூற்றாண்டு பழமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ).
இது மட்டும் அல்ல இந்த இடத்தை சுற்றி மொத்தம் 12 நீர் அணைகள் உள்ளன அவைகள் தேக்கி வைத்து இருக்கும் நீரின் அளவு 400 கோடி cubic meter நீர்.
இப்போதைக்கு அரசு செய்திருக்கும் வேலை என்ன தெரியுமா தினமும் 340 kl நீரை இந்த ஆய்வகம் அமைக்க அந்த முல்லை பெரியார் அணையில் இருந்தே எடுத்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உள்ளது.
மலையில் வைக்க படும் அந்த வெடிகளில் எழும் புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றை மாசு படுத்தும் நீரை மாசு படுத்தும் (சாதாரண கல் குவாரிக்கு அருகில் தேங்கி இருக்கும் நீர் நிலைகள் பார்த்தாலே புரியும் ).
அந்த சப்தம் காட்டின் விலங்குகளை பறவைகளை அச்சுறுத்தும்.
மலையும் காட்டும் ஆறும் அருவியும் மழையும் ஒன்றோடு ஒன்று கண்ணுக்கு தெரியாத சங்கிலி பிணைப்பால் பிணைந்து இருக்க கூடியவை ஒன்றை பாதித்தால் அந்த பாதிப்பு மற்றதை பாதிக்க கூடியவை.
இது இயற்கை ஆர்வலர் சமூக ஆர்வலர்களின் பார்வை.
அடுத்து அறிவியல் பார்வையில் பார்த்தால்...
நமக்கு சொல்ல பட்டது போல அட்மாஸ்பியர் நியூட்ரினோ வை ஆராய்வது மட்டும் நோக்கம் அல்ல இது வேற வித ஆய்வு என்கிறார்கள் அதாவது பெர்மி யில் இருந்து செயற்கை lab made நியூட்ரினோ கற்றைகள் பெரும் செறிவுடன் அனுப்ப பட்டு அது இங்கே ஆராய பட போகிறது இதன் மூலம் அணு ஆயுதத்தை தொலைவில் இருந்து அழிக்கும் அணு ஆயுத ஆய்வு திட்டம் இது என்று சொல்ல படுவது எந்த அளவு உண்மை என்பதை உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்
ஆனால் அடுத்து நான் சொல்ல இருப்பது முக்கியமானது.
அது ஒரு சாமானியனின் பார்வை ஒரு எளிய குடிமகனின் கேள்வி. .
ஒரு அணையை கட்டும் போதோ அல்லது ரயில் பாதை அமைக்கும் போதோ கூட மலையை வெடிக்க தகர்க்க தான் செயகிறோம் ஆனால் அதை யாரும் எதிர்ப்பது இல்லை காரணம் திட்டம் ஏதுவாக இருந்தாலும் அதனால் என்ன நன்மை என்பது தான் ஒரு சாமண்யன் கேள்வி...
இந்த ஆய்வகத்தில் பெரிய உண்மை கண்டு பிடிக்க படலாம் (ஏற்கனவே நியூட்ரினோ ஆய்வில் 2 நோபல் பரிசு வாங்கி இருக்கிறார்கள் நிச்சயம் நியூட்ரினோ ஆய்வு நோபல்கான ஒரு நல்ல களம் தான் ) ஆனால் அந்த பெருமை நம்ம நாட்டிற்கு இல்லை. இந்த ஆய்வை மேற்கொள்ளும் நாட்டிற்கு தான் அந்த பெருமை. நமக்கு இதனால் பத்து பைசா லாபம் இல்லை.
போதிய அளவு வேலை வாய்ப்பும் கூட இந்த திட்டம் வழங்க பட போவது இல்லை. ஆனால் இதனால் ஏதாவது ஆபத்து உண்டானால் அது முழுக்க முழுக்க நமக்கு தான்.
ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் கோலா கம்பெனிகள் ஏன் அவர்கள் தொழிர்சாலைகளை நம் நாட்டில் அமைத்து இருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதற்க்கு முக்கியகாரணங்கள்...
1. தொழிற்சாலைக்கு தேவையான நிலம் மற்றும் நீரை மற்றும் இதர பொருட்களை இங்கேயே எடுத்து கொள்வது. மற்றும் மறை நீர் கான்செப்ட்
2. இயற்கை அழிவு சுற்றுசூழல் மாசு போன்ற வற்றைலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்றி நம் நாட்டை பலி கடா ஆக்குவது...
3. இங்கே குறைவான ஊதியத்தை கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள கூடிய வசதி..
4. மற்றும் இங்கேயே சந்தை படுத்தும் வசதி
இப்படி பட்ட காரணங்கள் இந்த INO ஆய்வகத்துக்கும் பொருந்தும்.
இப்படி பட்ட நிலையில் இவர்களுக்கு அனுமதி கிடைப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில் எளிமையானது கமிஷனுக்கு கையெழுதிடும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை எதுவும் சாத்தியமே...
இந்த தேனி ஆய்வகதால் நன்மை விளைந்தால் அது வெளி நாட்டுக்கும் ஆனால் தீங்கு விளைந்தால் நம் நாட்டிற்கும் என்ற இந்த திட்டம் "
நமக்கு எந்த அளவு பலனளிக்கும்.??
நாம் இன்னும் கடல் எண்ணையை வாளியில் அள்ளி கொண்டிருக்க..
இன்னும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கருவி இல்லாமல் இருக்க..
இன்னுமும் கடலில் சிக்கிய மீனவனை காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க.. இன்னுமும் பேருந்து ஓட்டையில் குழந்தைகள் விழுந்தது கொண்டிருக்க..
இப்படி நாம் வளர்க்க வேண்டிய அடிபடை அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்க்க படாமல் இருக்க யாருக்கோ பேரை புகழை தேடி தர போகும் ஆய்வுக்கு நமது காட்டை மலையை அழித்து இந்த அறிவியல் ஆய்வகத்தை கட்டுவதால் நமக்கு என்ன பயன்.
அறிவியலை நேசிக்கும் அறிவியல் காதலனாக நான் சொல்கிறேன் நியூட்ரினோ நம் நாட்டுக்கு தேவை இல்லாத திட்டமே..
நன்றி.
பின் இணைப்பு :
INO தனி அமைப்பு அல்ல அதனுடன் இணைத்து ஆய்வுக்கு கைகோர்த்து இருக்கும் முக்கிய 7 பார்ட்னர்கள்..
Tata Institute of Fundamental Research (TIFR), Mumbai,
Bhabha Atomic Research Centre (BARC), Mumbai,
Institute of Mathematical Sciences (IMSc), Chennai,
Saha Institute of Nuclear Physics (SINP), Kolkata,
Variable Energy Cyclotron Centre (VECC), Kolkata,
Harish Chandra Research Institute (HRI), Allahabad
மேலும் இதனுடன் சேர்ந்து இணைக்க இருக்கும் 13 மேலும் சில பார்ட்னர்கள்
Aligarh Muslim University, Aligarh,
Banaras Hindu University, Varanasi,
Calcutta University (CU), Kolkata,
Delhi University (DU), Delhi,
University of Hawaii (UHW), Hawaii, Himachal Pradesh University (HPU), Shimla,
Indian Institute of Technology, Bombay (IITB), Mumbai,
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam, North Bengal
University (NBU), Siliguri,
Panjab University (PU), Chandigarh, Physical Research Laboratory (PRL), Ahmedabad,
Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON), Tamil Nadu
மற்றும் Manipal Institute of Technology, Manipal...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.