08/04/2018

தமிழகத்தை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் பாஜக மோடி...


உங்களுக்கான அரிசியில் உங்கள் பெயர் எழுத பட்டுள்ளதோ? இல்லையோ?  உங்களுக்கான தோட்டாவில் உங்கள் பெயரை அரசாங்கம் எழுதிவிட்டது.
சும்மா பரப்புக்காக பேசதப்பா. என்னவிடயம் தெளிவா சொல்லு. ஆதாரம் இருக்கா? என்கிறீர்களா?

கீழ் கண்ட நிகழ்வுகளின் முடிச்சை தொடர்பு படுத்தி பாருங்கள்..

நிகழ்வு-1: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்றே அதை முன்பே உணர்ந்த  இறைவன் போல திரு. வெங்கய்யா நாயுடு  முன்பே வந்திருந்து திரு. ஓ. பன்னீர் செல்வத்துக்கு கவர்னர் வித்யா சாகர் ராவ் மூலம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்றவுடன் ஜெ.வால் நிறுத்த பட்டிருந்த பூந்தமல்லி - மதுராவாயல் -துறைமுக மேம்பாலத்தை உடனடியாக முடிக்க நிதி ஒதுக்கி உத்தரவிடுகிறார். ஜெ.இறப்பால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

(கல்யாணத்துக்கு இரண்டுநாள் முன்னாடி போவாங்க! சாவுக்கு முன்னாடி போவாங்களா?)

சாகர்மாலா தொடங்கபட்டு அதானிக்கு சொந்தமாக சென்னையில் ஒரு துறைமுகம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? இதனால் பலகோடி லாபத்தில் இயங்கிய அரசின் காமராஜர் துறைமுகம் இனிநஷ்டமடைய தொடங்கும்.

நிகழ்வு-2 : கடந்த சில மாதங்களுக்கு முன் திரு.எடப்பாடி பழனிசாமி அரசு 89 MLA வைத்துள்ள எதிர்கட்சியின் தயவோடு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையை (ECR) இந்திய பாதுகாப்பு துறைவசம் விமானங்கள் நிறுத்திக்கொள்ள ஒப்படைத்தது.

கிழக்குக்கடற்கரை சாலை என்பது வெறும் சென்னை- பாண்டிச்சேரி சாலையல்ல மீஞ்சூர் தொடங்கி பாண்டிச்சேரி நாகபட்டினம் வாயிலாக இராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய சாலை.

மேலும் அது கன்னியாகுமரி வரை துறைமுக நகர்களை இணைக்கும் சாலை.

நிகழ்வு-3 : காரணமேயின்றி தனுஷ்கோடி மனிதர்கள் வாழமுடியாத பகுதி என சட்டசபையில் அறிவித்து கள்ளத்தனமாக ராணுவ மையம் ஆக்கபட்டு வருவது. தூத்துகுடிக்கருகே குலசேகரபுரத்தில் மனிதர்கள் நுழைய தடை என்று அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதற்கும் எதிர்கட்சி வாய்மூடிக் கிடக்கிறது.

நிகழ்வு-4 : தமிழகத்தை சேர்ந்த திருமதி நிர்மலாசீத்தாராமன் இராணுவ அமைச்சர் ஆக்க படுகிறார்.

ஒரேத்தகுதி: மக்கள் போராட்ட களங்களில் அது நெடுவாசல் போராட்டம்  ஆனாலும் சரி மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யபட்டபோதும் சரி. குமரி ஒக்கி புயல் பாதிப்பு போராட்டங்களிலும் துணிச்சலாக சென்று போராட்டகாரர்களை மிரட்டலாலும் பொய் வாக்குறுதியாலும் பணிய வைக்கு சாதுர்யம் உடையவர்.

இனிமேல் தான் தமிழகத்தில் அவருக்கு வேலையே இருக்கு.

நிகழ்வு-5 : கோவை கொடீசியா தொழிற்பேட்டை இராணுவ பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் சிறப்பு மண்டலமாக அறிவிக்க பட்டு இராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் முதற்கட்ட பராமரிப்பு பணிக்காக ரூ60 கோடி ஒதுக்க பட்டது.

நிகழ்வு -6 : இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஆயுதக்கிடங்குக்காக வலுகட்டாயமாக மக்கள் வெளியேற்ற பட்டது! 6000 ஏக்கர் நிலத்தை கையக படுத்த 22 கிராமங்கள் அப்புறபடுத்த பட இருக்கிறார்கள்.

நிகழ்வு-7 : தஞ்சைமாவட்டம் மன்னார்குடி, திருவாரூர்,கதிராமங்கலம் பகுதிகளில் நீலச்சீருடை அணிந்த மத்திய துணைராணுவ  சிறப்பு காவல்படை அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக காவல் துறை இருக்கும் போது எதற்காக மத்திய சிறப்பு காவல் படை?

ஆளுனர் காவிரிவிடயமாக மோடியை  சந்திக்கிறார் என்று தமிழன் நினைத்தால் தமிழனின் அறியாமையே. நமக்கு புரோகிதம் பண்ண நாள் குறிக்கவே சென்றுள்ளார்.

வரும் ஏப்ரல் 11 ல் பாதுகாப்புகண்காட்சி (DFEXPO18) என்ற பெயரில் அடிமைஅரசால் ராணுவத்துக்கு தாரைவார்க்கபட்ட சென்னை ECR சாலை திருப்போரூரில் திருவிடந்தையில்  நடை பெருகிறது அதில் கலந்து கொள்ளவே பிரதமர் வருவதாக இருந்தது அசாதாரணமான சூழ்நிலை காரணமாக மோடி வராமல் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆரம்பத்தில் தமிழக ஆர்பாட்டத்தை கண்டு பயந்த மோடி ஆழம் பார்க்க கர்நாடகாவை சார்ந்த சூரப்பனை  துணைவேந்தராக்கி பரிசோதித்து பார்த்தார்கள். சோதனை வெற்றி.

தமிழன் வாழைமட்டை என்று முடிவு கட்டி விட்டார்கள். இப்போது மோடியே 11 தேதி வருகிறார். நான் கருப்பு கொடி மட்டும் காட்டுறேன் கோச்சுகாதீங்க மோடிஜி. என்று ஸ்டாலின் முன்னறிவிப்பு செய்துள்ளார்.

விரைவில் தமிழகத்தில் நடைபெரும் போராட்டங்களை காரணம் காட்டி தமிழக  காவல்துறை கையிலிருந்து தமிழகத்தின் பாதுகாப்பு துணை ராணுவத்துக்கு செல்லும் வாய்பிருப்பதாகவே தெரிகிறது.
மண்ணுரிமை போராளிகளே.  இயற்கை காவலர்களே.

உங்கள் சட்டைகளை கழற்றி மார்புகளை தயாராக்கி கொள்ளுங்கள். இந்திய அரசு பரிசளிக்கும் தோட்டாக்களை தாங்க.

இவர்கள் தமிழகத்தின் இயற்கை வளங்களை, கனிம கரிம வளங்களை , உலகெங்கும் தடைசெய்யபட்ட அழிவு திட்டங்களை தொடங்க மற்றும் இலங்கையில் காலூன்றும் சீனாவை கண்டு பயந்து தமிழகத்தை இராணுவமயமாக்க துணிந்து விட்டார்கள்.

இன்னொரு காஷ்மீர் இந்தியாவில் உருவாக களம் அமைத்து விட்டார்கள்.

தமிழ்நாட்டை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து அதில்வரும் பொருளாதாரத்தை வைத்து கொஞ்ச நாள் வல்லரசு என மார்தட்டி கொள்வார்கள்.

பிறகு குடிகாரன் வீட்டை விற்று குடிப்பது போல ஒவ்வொரு மாநிலமாக கொள்ளையடித்து எதிர்த்து கேட்கும் மக்களை சுட்டு தள்ளி உள்நாட்டு போரை உண்டாக்கி ஆப்பிரிக்கா அரேபிய நாடுகளுக்கு தொடர்ச்சியாக இந்தியா மாறும். அதில் சோமாலியாவாக தமிழகம் இருக்கும்.

நாம் எல்ல நல்ல திட்டங்களையும் எதிர்பதாக அண்டை மாநிலத்தார் சிரிக்கிறார்கள்.

பாவம்.. நமக்காவது நமக்கு நடக்க போகும் அநீதி தெரிந்துள்ளது அவர்களுக்கு அதுவும் தெரியாத தற்குறிகளாக உள்ளார்கள்.

உங்களை கொல்ல உங்களின் அரசாங்கம் துடிக்கிறது. நம்மை நாம் எப்படி காப்பாறிக் கொள்ள போகிறோம்?
ஆனால் அறம் வெல்லும்.

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

இதற்கான எடுத்துக்காட்டு.
தலைநகரில் புழுதிபுயல். இயற்கையை அழிக்க துடிப்பவனுக்கு இயற்கை எச்சரிக்கை செய்கிறது.

பாதுகாப்பு கருவிகள் கண்காட்சி (DEFEXPO2018) துவங்க இருக்கும் நிலையில்உலகில் உள்ள கொலைகார ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளின் ஒன்று கூடும் நாளை நெருக்கத்தில் வைத்து கொண்டு கொத்து குண்டுகள், விஷவாயு குண்டுகள், உயிரியல் சிதைக்க கூடிய குண்டுகள் தயாரிக்கும் இஸ்ரேல் போன்ற ஆயுத வியாபாரிகள் ஒன்று கூடும் இந்த நாளில் பாதுகாப்பு துறை இணையதளமே முடக்கம் செய்ய பட்டது மிகப்பெரிய வெட்ககேடு.

தன் முதலாளிகள் மத்தியில் தமிழனை கிள்ளுகீரையாக நினைத்த மோடி தலைகுனிந்து நிற்கிறார்.

அதனால் தான் அசாதாரண சூழ்நிலை என்று வர்ணித்த பிரதமரே இப்போது வேறு வழியில்லாமல் ஆயுத வியபாரிகளை தன் முதலாளிகளை  திருப்தி படுத்த இந்த கண்காட்சிக்கு வருகிறார்.

இது தொடக்கமே.

வெல்லப்போவது தமிழனின் மறமா? அல்லது கோழைகளின் துப்பாக்கிகளா?
என்ற கேள்வியை விட...
தமிழனின் அறம் எல்லாவற்றையும் விட வலிமையானது.
   
நாம் இயற்கைக்கு துணையாய் நிற்கிறோம்  இயற்கை நமக்கு துணையாய் நிற்கிறது.

அரிமாக்கள் முழங்காத காட்டில் தான் நரிகள் ஊளையிடும்.

குகைவாழ் ஒரு புலி.. உயர்குணமேவிய தமிழன் தம் சிம்மகுரல் கொடுக்க துவங்கிவிட்டான்.. நரிகள் ஓடும்..
எப்பாடு பட்டேனும் வென்றே தீருவான்...
என்பதை காலம் சொல்லும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.