08/04/2018

பாஜக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ கல்வியாளரோ அல்ல...


வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்படுவோருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்தப் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

1. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநராகப் பணியாற்றியபோது பெரும்பாலான நாள்களில் பணிக்கு வராதது.

2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது.

3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும் 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1,958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்துக்கு ஆளானது.

4. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளைத் தமது கண்டுபிடிப்பாக காட்டியது. 5. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.