போராட்டம் என்பது யாருக்கு எதிராக செல்லவேண்டுமோ அப்படி செல்கிறதா என்றால் இல்லையென்று சொல்வேன்…
காவிரி நீருக்கான போராட்டம் அதனின் வளத்தை சுரண்டும் வணிகத்திற்கு எதிராக இருக்கவேண்டும்..
எனக்கு தெரிந்து காவிரியின் (நீரின்) தமிழர் உரிமைகளை பறிப்பதென்பது அது பெட்ரோலிய மண்டலமாக இருக்கட்டும் (தொடர்ந்து தண்ணீர் வரவில்லையெனில் பெட்ரோலிய மண்டலமாகிவிடும் டெல்டா மாவட்டங்கள்) அல்லது மணல் திருடாக இருக்கட்டும், இதை எதிர்ததே போராட்டங்கள் தொடரவேண்டும்…
ஆனால் மத்திய அரசை நோக்கி போராடுவது வீண்… அரசுகளை இயக்கும் வணிகத்தை எதிர்தது போராட்டம் இருக்கவேண்டும்… மறைநீர் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் ஒவ்வொரு பொருள் தயாரிக்க செலவிடப்படும் நீரை மறை நீர் என்பார்கள்..
தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் இந்த நீரை பெரும் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை எதிர்தது ஒரு கருத்தியல்கூட பேசப்படவில்லை..
அதிகமாக ஒரு கார் தயாரிக்க 2,00,000-5,00,000 லிட்டர் தேவைப்படுகிறது தமிழகத்தில் கிட்டதட்ட 10,00,000 கார்கள் வருடத்திற்கு தயாரிக்கப்படுகின்றன என்றால் எவ்வளவு நீர் தாரை வார்ககப்படுகிறது என்பதை நீங்களே கணக் கெடுத்துக் கொள்ளுங்கள்..
இந்தியாவின் முட்டை உற்பத்தியில் 3 இல் 2 பங்கை நாமக்கல்லலில் இருந்து உருவாகிறது அதனின் தண்ணீர் தேவை 150 லிட்டர் ஒரு முட்டைக்கு என்றால் அதனின் தேவையும் அதேமாதிரி திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஆடைக்கும் சராசரியாக 500 லிட்டர் செலவு எனகணக்கிட்டால் நம் தமிழகத்தின் தண்ணீர் எப்படி சூறையாடப்படுகிறது என்பது புரியும்…
இது ஒரு குறைந்தபட்ச கணக்குதான்.. மூன்றாம் உலகப்போர் தண்ணீரை மையமாக வைத்துதான் இருக்கும் என்கிறார்கள் ஆனால் தமிழகத்திலிருந்து தண்ணீர் ஏன் இப்படி தாரைவார்ககப்படுகிறது…
இன்னொரு முக்கியமான விடயம் பெப்ஸிக்காக தாமிரபரணியிலிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்…
இப்படி எல்லாபக்கமும் தண்ணீரை தாரைவார்ததுவிட்டு விவாசாயிகளுக்கு கடல் தண்ணீரை சுத்தப்படுத்தி தருகிறேன் ஒருத்தன் தெனாவெட்டாக தமிழகத்தில் பேசிவிட்டு செல்லமுடிகிறது அதாவது விவசாயத்திற்கும் நம் வரிபணத்தில் கடலநீரை சுத்தம் செய்துகொள்ளவேண்டும் தமிழகத்தின் நீரை இலவசமாக கம்பெனிகளுக்கு தாரை வார்பபார்கள்…
இப்படி பேசுபவர்களையும் இந்த ஊடகங்களில் இதே மாதிரி பேசுபவர்களையும் ஒரு மாதம் வேலூரில் தோல்பதனிடும் தொழில்சாலை அருகில் வாழ வையுங்கள்… அப்புறம் தெரியும்…
வீரானம் ஏரி நிரம்புவதே காவிரி நீரில்தான் என்றால் சென்னை வாசிகளும் சேர்ந்தே போராடவேண்டும்…
சரி விடயத்துக்கு வருவோம் இந்த மறைநீரின் பயன்பாட்டில் விளையும் அனைத்து பொருள்களையும் தமிழக எல்லையை தாண்டக்கூடாது அதற்கு நெடுஞ்சாலைகள், இரயில் பாதை, விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் உள்ள சரக்கு போக்குவரத்தை மட்டும் முற்றுகையிடுங்கள் எப்படி பதறுகிறார்கள் என்று பாருங்கள்…
அதைவிடுத்து இன்னும் ஒத்துழையாமை இயக்கம், மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவது என பொதுமக்களுக்கு இடைஞ்சலாக போராட்டங்கள் பயணலிக்காது… இந்த மாதிரி போராட்டங்கள் சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன் பயண்பட்டிருக்கலாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த … இப்ப அது தேவையில்லை அதனால் நேரிடையாக வணிக பரிமாற்றத்தை முறறுகையிட்டாலே மோதும்!
போராட்டம் நடத்தப்படவேண்டிய இடங்கள்:
ONGC
மணல் குவாரிகள்
பெப்ஸி தொழில்சாலை
கார் தொழிற்சாலைகள்
துறைமுகங்கள்
வானூர்தி நிலையங்கள் (சரக்கு போக்குவரத்து மட்டும்)
நெடுஞ்சாலைகள் (சரக்கு போக்குவரத்து மட்டும்)
இரயில் பாதைகள் (மக்கள் பாதிப்படைவார்கள்)
இப்படி மக்களுக்கு பிரச்னையில்லாமல் அதே சமயத்தில் வணிகத்தின் தலையில் அடிக்க வேண்டும்…
சரி ஏன் காவிரியில் நீர் போதுமானதாக இல்லை என்ற காரணத்தையும் தேடினால் (இருக்கிறதில் ஒரு விகத்தித்தை பகிரவேண்டும் என்பது நியதி ஆனால் இப்ப இருக்கிற அரசியலில் அது சாத்தியபடுத்த முடியாது) மேற்கு மலைத்தொடச்சி மலைப்பிரேதசங்களின் அழிவு திட்டங்கள்… அதாவது தலைகாவிரி மலைப்பிரதேசங்களில் மழை நன்றாக பொழிந்தால்தான் காவிரியில் நிறைய தண்ணீர் வரும் அதற்கு மேற்கு தொடர்ச்சி மலைகள் பழையமாதிரி அடர்ந்த காடுகளாக மாறினால் மட்டுமே சாத்தியம்… அதாவது அங்குள்ள தேயிலை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அடர்ந்த காடுகளை மீட்டெடுக்காதவரை இது தொடர்கதைதான்…
மேற்கு மலைத்தொடர் அழிவின்கான விசயங்கள்…
தேயிலைத்தோட்டங்கள் (பணப்பயிர்கள்)
கல்வி நிறுவனங்கள்
ஆன்மீக கூடாரங்கள்
சுற்றுலா விடுதிகள் மற்றும் ஊர்கள்
நியூட்ரினோ மாதிரி திட்டங்கள்
இவைகளை களைந்தால்தான் காடுகளை மீட்க முடியும்.. இவற்றைப்பற்றி ஒரு புரிதலுமில்லாமல் தமிழகத்தின் ஏனைய நதிகளின் நீர் வளத்தையும் கூடிய சீக்கிரம் இழப்போம்…
இது தவிர இந்தியம் செய்த கொடுமையில் வேண்டுமென்றே தமிழகத்திற்கு காட்டின் பரப்பளவு குறைவாக வரும்படி பிரித்தது வேண்டுமென்பவர்கள் கேரளா தமிழக எல்லையில் மேற்கு மலைத்தொடரச்சி மலையில் google பாருங்கள் புரியும்.. கேரளத்திற்கு அளவிற்கு அதிகமான காடுகளையும் தமிழகத்திற்கு மிக்ககுறைந்த காடுகளையும் பிரித்துள்ளார்கள் அதே மாதிரி காவிரி உருவாகும் நிலப்பரப்பில் தமிழகத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தும் அதை கர்நாடகத்தோடு பிரித்து கொடுத்தது திட்டமிட்ட செயல்களே இவறனைபற்றியும் கொஞ்சமாவது தேடுங்கள் அப்பதான் தெரியும் எவ்வளவு காலமாக தமிழினத்தை அழிக்க திட்டம் போட்டிருப்பர்கள் எனப்புரியும்..
இதுதான் சாக்கு என்று நதி நீர் இணைப்பு திட்டமென்று கிளம்பி வருகிறார்கள்… ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் ஒரு விடயத்தை அரசாங்கம் திணிக்கிறதென்றால்்அது வணிகத்திற்கு உகந்தது இதைப்பற்றி வேறொரு பதிவில் பார்பபோம்… இந்த நதிநீர் இணைப்பு நிச்சயம் விவசாயிகளுக்கு பயணளிக்காது மேலும் விவசாயத்தை கார்பபரேட் மயமாக்கும் முயற்சி மேலும் இந்த நீரை தொழிற்சாலைகளுக்கு எளிதாக ஒரு இடத்திலிருந்து கடத்துவார்கள்… இப்பவே நமக்கு தினமும் கடக்கும் டோல்கேட்டின் வருமானம் பற்றி புரிதலிலாமல் இருக்கிறோம் இதில் ஒரு ஆற்றிலிருந்து எவ்வளவு நீர் திருப்பபடும் என்பதை எப்படி அறிவீர்கள்...
காவிரி நீர் இல்லையென்றால் நம்மால் தன்னிறைவு அடையமுடியாதா நிச்சயம் முடியம் தமிழகத்தில் ஏறத்தாழ குறைந்தது 500mm மழை பொழிகிறது அதுவுத் டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளோரம் 1000-2000mm மழை பொழிகிறது இவற்றை எப்படி பயண்படுத்துவது என்பதுபற்றி சிந்திப்பதே தமிழகத்திற்கு நல்லது… குளங்கள், ஏரிகள், காடுகள் என நிலத்தடி நீரை உயர்ததுவதிலும் சேமிப்பிலிம் கவனம் செலுத்தினாலே போதும்.. உடனே என்னை தமிழனத்துரோகி என்ற பட்டதெல்லாம் கொடுத்துவிடாதீர்கள்… அனைத்து நதிகளும் ஒவ்வொரு நிலப்பரப்பில் உயிர் நாடிகள் அவற்றை நம்மால் குளம், ஏரிகள், காடுகளை உருவாக்கி சரிகட்டமுடியாது… மேலும் இந்நதிகள் இயற்கை சுழற்சியின்அங்கங்கள் இவற்றிற்காக போராடுவது நமது உரிமை… அதே சமயத்தில் மாற்றை சிந்திக்க வேண்டுமென்பதே நோக்கம்… சல்லிகட்டு (A2 பால்) போராட்டம் மாதிரி இந்தக்காவிரி போராட்டம் (மறைநீர்) மக்களிடத்தில் சென்றடைய வேண்டுமென்பதே எனது விருப்பமும்…
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.