மறைநீர் மதுபானங்களில்/குளிர்பானங்களில் உள்ளது ஓரளவு அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அதன் வீரியத்தை யாரும் உணரவில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது அனைவரும் ஆற்று நீரை உறிஞ்சி எடுப்பது வரை தெரிந்து வைத்திருக்கிறோம்.
மறை நீர் என்பது நிலத்தடி நீரை உறிஞ்சிவது மட்டுமல்ல ஆற்றுநீரை உறிஞ்சிவதும் அடக்கமே. பெப்சி மற்றும் கோலாவால் தாமிரபரணி ஆறு+பல இடங்களில் இருந்து மோத்தமாக 30லட்சம் லிட்டர்கள் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது ஒரு நாளைக்கு இந்த கணக்கு. அதுபோல மதுபான ஆலைகளை பற்றி பார்த்தோமானால் TASMAC இணைய தளத்தில் 11உற்பத்திஆலைகள் மற்றும் 7வடி ஆலைகள் மூலம் சாராய உற்பத்தி செய்து சப்ளை செய்யப்படேகிறது. இதற்கும் பல லட்சக்கணக்கான லிட்டர்கள் தண்ணீர் நில்தடி நீராகவும், ஆறுகளில் இருந்தும் உறிஞ்சப்படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பீர் பானம் செய்ய தோராயமாக 150லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது மூலப்போருளை கணக்கில் கொள்ளாமல். கோதுமை /பார்லி உற்பத்தி செய்ய கிலோவிற்கு 1500லிட்டர் தண்ணீர் தேவை இதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு லிட்டர் பீர் பானத்திற்காக மட்டுமே 450 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள இருபெரும் மாநில கட்சிகள் தான் இந்த சாராய ஆலைகளை நடத்துகின்றன. இதன் மூலம் கொள்ளை போகும் நீரின் அளவு வருடம் முழுவதும் ஒரு ஆற்றில் ஓடக்கூடிய நீரின் அளவை விட பன்மடங்கு அதிகம். தண்ணீரை திருடி அதை உங்களிடமே பல மடங்கு விலக்கு மதுபானமாகவும் குளிர்பானமாகவும் விற்கிறான். அவர்களுடைய தயாரிப்பு செலவு , விற்பனை விலையை கணக்கிட்டால் நாம் முட்டாளாக்கப்படுவது நன்றாக தெரியும். இதே அரசாங்கம் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக கடல்நீரை சுத்தப்படுத்தி அதை விற்பனை செய்வது எவ்வளவு அயோக்கியத்தனம் . நல்ல தண்ணீரில் சாரயம் மக்களுக்கு கடல்தண்ணீர்....
மக்கள் திருந்தினால் மட்டுமே மாற்றம் ஏற்படும். மது அருந்துவதில்இந்திய அளவில் 100க்கு 20% பேர் தமிழர்கள். குடி குடியை மட்டுமல்லை குடிநீரையும் கெடுக்கும்.
http://www.tasmac.co.in/suppliers.htm
https://www.thenewsminute.com/article/politicians-and-business-alcohol-why-prohibition-remains-dicey-topic-tn-32963?amp
https://m.hindustantimes.com/business-news/ban-of-pepsi-coca-cola-in-tamil-nadu-and-the-rise-of-indian-nationalism/story-oWUjtvUiBc5u4dDg34GCYJ_amp.html
https://www.nature.com/scitable/blog/eyes-on-environment/water_world
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.