காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சர்ச்சையால் துயரத்தில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளம் குளிர காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 2100 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு 2100 கனஅடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக,கடந்த மார்ச் 29-ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் புதிய செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி ஆணையிட்ட நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்து அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.