09/05/2018

வைகோ நாயூடு மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்ட மதிமுக வின் நண்பர்களுக்கு....


1) வைகோ நேர்மையானவர்
நியாயமானவரென்றால்...

தன் கண்முன்னே கூப்பிடு தூரத்தில்... குறிஞ்சாக்குளத்தில்... காந்தாரி எனும் வாழ்ந்து மறைந்த பறைச்சி ஒருத்திக்கு கோயில்கட்ட முயன்ற குற்றத்திற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட... ஏதுமறியா அப்பாவிப் பறையர்களின் சாவுக்கு எப்போதாவது நீதி கேட்டிருக்கிறாரா....?

2) அந்தக்கொலையில் தன் தம்பி... ரவிச்சந்திரனை திருவேங்கடம் காவல்துறை குற்றம்சாட்டி.... முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரை பதிவிட்ட போது .... வைகோ தன் அசுரத்தனமான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி... தன் தம்பியை மீட்டாரா... இல்லையா.....?

3) கொலை நடந்து இத்தனை
ஆண்டுகளாகியும்... திருவேங்கடம் காவல்துறையிலிருந்து குறிஞ்சாக்குளம் பிரிக்கப்பட்டு.... குருவிகுளம் காவல் நிலையத்தோடு இணைக்கப்பட்ட பிறகும்... அப்பாவிப் பறையர்களின் இழவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதிக்காத கொடியவர்களை நாங்கள் அடையாளம் காட்டினால் வைகோ தண்டிப்பாரா.....?

4) நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கம் ... கோவில்பட்டியில் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு .... அதே குறிஞ்சாக் குளத்தைச் சேர்ந்த ஒரு நாயுடு சமூக பிரமுகர் இறந்த போது. டெல்லியிலிருந்து அஞ்சலி செலுத்த ஒடி வந்தாரே வைகோ.... எதனால்.... சொந்த சாதி என்பதாலா...?

5) விவசாய சங்க ஊர்வலத்தில் மரணமடைந்த நாயுடு சமூக பிரமுகருக்கு அதே குறிஞ்சாக்குளத்தில் பெரிய நினைவிடமிருப்பதும்... உரிமைப் போரில் செத்த பறையர்களின் ... சவக்குழியில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாமல் தவிப்பதும் வைகோவுக்கு தெரியுமா தெரியாதா....?

6) சமதர்மம் பற்றி வாய்கிழியப் பேசும் தலைவர் வைகோ அவர்கள்... YOU CAN DO என்று கருப்பின ஒபாமாவுக்கு ஆங்கிலத்தில் புத்தகமெழுதிய தலைவர் வைகோ.... தான் வாழும் கரிசக்காட்டில் எத்தனை கருப்பின பள்ளர்களுக்கும்... பறையர்களுக்கும்... கண்ணுக் கெட்டியதூரம் வரை நிலம் வைத்திருக்கும் தன்னுடைய நிலத்தில்.... வாஞ்சையோடு அந்த மக்களுக்கு செய்தது என்ன....?

7) தலைவர் வைகோ வகித்த முதல் மக்கள் பதவி குருவிகுளம் யூனியன் சேர்மன்.... அந்த குருவிகுளம் யூனியன் தேர்தலில் உங்களுக்கு குறிஞ்சாக்குளம் பறையர்கள் யாருமே வாக்களிக்க வில்லையா....?

8) சாதிப் பதற்றம் மிகுந்த நீங்கள் பிறந்த சங்கரன்கோவில் தாலுகாவில்.... இப்போதும் ஆண்டொன்றிற்கு முப்பது கொலைகள் விழுகிறது....சாதியின் பெயரால்... சாதி கடந்த நீங்கள் இதைத் தடுக்க ஒரு துரும்பை கிள்ளிப் போட்டதுண்டா....?

9) குறிஞ்சாக்குளம் படுகொலை வழக்கில் உங்கள் அன்பு தம்பி ரவிச்சந்திரனின் விடுதலைக்குப் பின்னால் நீங்கள் இல்லையென்று..... நாமிருவரும் ஏற்றுக் கொண்ட தலைவன் பிரபாகரன் மேல் சத்தியமிடுங்கள்.....?

10) உடலையே அறுத்தெடுக்கும் புகையிலை பொருட்களின் தென்னக முகவர் உங்கள் மகன்.. துரை வையாபுரி என எனது தம்பிகள் வைக்கும் கடும் விமர்சனத்திற்கு நேர்மையான பதிலை எப்போது வைப்பீர்கள்....?

கேள்விகள் இருக்கிறது
தலைவரே....

நக்கல முத்தம்பட்டி பஞ்சாயத்து தலைவரான ஒரு அருந்ததிய பெண்ணின் கனவரான ஜக்கனை உலக்கையால் அடித்துக் கொன்றதையும்...

அதற்கு பின்னால் உள்ள வரலாற்றையும் இனி பேசப் போகிறேன்....

நீங்கள் தனிமனித ஒழுக்கம்
நிறைந்தவர்... அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை....

ஆனால் ஒரு நல்ல தலைவருக்கு அதுமட்டுமே தகுதியில்லை... தலைவர் வைகோ அவர்களே....

குறிஞ்சாக்குளத்தில் அநியாயமாய்ச் செத்துப்போன ஒரு தமிழ்ச் சாதிப்பறையனின் குரல் இது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.