20/05/2018

அளவில்லாமல் நடக்கும் மணல் கொள்ளை...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் ஆம்பூர் வட்டம் பாலாற்று பகுதிகளில் கொள்ளை போகும் மணல் இவை அனைத்தும் கொத்தகுப்பம், அகரம் சேரி பட்டு போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

இரவு நேரங்களில் தட்டாங்குட்டை கல் மடுகு காகா தோப்பு குடியாத்தம்  கிராமத்திலிருந்து வரும் மினி டிப்பர் லாரிகளில் பல்வேறு சாலை விபத்துகள் அவ்வப்போது நடந்து வருகிறது.

பாலற்றில் இருந்து மாட்டு வண்டிகள் முலம் மணல் கொண்டுவரப்பட்டு மினி டிப்பர் லாரிகளில் நம் பகுதியில் இருந்து பக்கத்து ஊர்களில் சட்டவிரோதமாக திருடி சென்று பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது கொள்ளை கும்பல் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களை மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களை பயன்படுத்தி அவர்களுக்கு மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற அனைத்து விதமான தீய பழக்கங்களை கற்றுத்தருகிறார்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகமாக மணல் திருடுவதில் ஈடுபடுகிறார்கள் இவர்களின் எதிர்கால கல்வியை மணல் கொள்ளை கும்பல் சீரழித்து வருகிறது.

அனைவரும் ஒன்று திரண்டு இவற்றை தடுக்க நினைத்தாலும் அவர்களை அவரது வீட்டிற்கே சென்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் மிரட்டுகின்றார்கள் மற்றும் வெளியில் நடமாட முடியாது போன்ற தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். லாரி வைத்து உன்னை அடிச்சு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.