அந்த ஏரியில் இருக்கும் குப்பைகள் அந்த ஏரியில் கொட்டும் சாக்கடைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மண்ணை அள்ளுகிறார். அதை கொண்டு போய் பல்லாவரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக கொட்டுகிறார். அந்த பணிக்கும் அவர் தான் சப் கான்டராக்ட் எடுத்துள்ளார்.
இந்த விவரங்கள் அனைத்தும் தாசில்தார் பார்வைக்கு அறப்போர் இயக்கம் கொண்டு செல்கிறது. மேலும் பத்திரிக்கைகளுக்கு தகவல் அளித்து செய்தி வெளியாகிறது. இதையடுத்து களத்தில் இறங்கிய கனிமவளத்துறை முறைகேடாக ஏரியில் மண் திருடிய கான்டராக்டரின் வண்டிகள் அனைத்தையும் பறிமுதல் செய்கிறது.
இப்படி மணல் திருடி ஏரிகளை சீரழிப்பதற்கு கான்டராக்ட் கொடுப்பதற்கு பதிலாக ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, சாக்கடை நீர் ஏரிக்குள் வருவதை நிறுத்த, ஏரிக்குள் இருக்கும் குப்பைகளை அகற்ற முயற்சி எடுத்தால் ஏரி பிழைக்கும். ஏரி பிழைத்தால் தான் அதை சுற்றி குடியிருக்கும் மக்களும் பிழைப்பார்கள்.
செய்தி - http://www.newindianexpress.com/cities/chennai/2018/jun/10/chennai-lake-restoration-or-soil-diversion-1826036.html
https://www.dtnext.in/News/City/2018/06/15000102/1076111/Contractor-smuggles-sand-from-Pallavaram-Lake-vehicles-.vpf?TId=112132
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.