17/06/2018

நான் உங்களை நேற்று நடந்த போட்டியில் பாண்டியா எத்தனை ரன்கள் அடித்தார் என கேட்கபோவதில்லை...


புதிதாக பொழுதுபோக்கு உலக கோப்பை விளையாட்டில் நேற்று ரொனால்டோ எத்தனை கோல் அடித்தார் என கேட்கபோவதில்லை..

ஏனெனில், நீங்கள் அந்த அப்டேட்டில் புலிதான்..

நான் சொல்லபோவது என் கையில் உள்ள மினரல் வாட்டர் 6 மாதமாக திறக்காமல் உள்ளது, அதில் எந்த உயிர்களும் வாழ தகுதியற்ற சத்துகளற்ற நீராக உள்ளது, அவற்றை குடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பல,..

மற்றும் எனது மற்றொரு கையில் மண்பானையில் இரும்புச்சத்துகளுடன் சேகரிக்கபட்ட நிலத்தடி நீர் பற்றிதான் நான் #குரல் கொடுத்துகொண்டு இருப்பது.

ஏனெனில் இன்று கதிரமங்களம், தூத்துகுடி, திருநெல்வேலி மற்றும் பெருந்துறை சிப்காட் போன்ற பல இடங்களில் நீங்கள் கோடி கணக்கில் சம்பாதித்தாலும் சுத்தமான கனிமச்சத்து நிறைந்த நிலத்தடி நீர் குடிக்க முடியாது.. ஏனெனில் அங்குள்ள தொழிற்சாலை கழிவுநீர்கள் நிலத்தடி நீரை பாழ் படுத்திவிட்டது.

2வது படத்தில் நான் பல மாதங்களாக விழிப்புணர்வு செய்து வரும் நமது வளமிக்க ஆற்று நீரில் நேற்றும் திருப்பூர் முதலாளிகள் அபாயமான சாயக்கழிவுகளை கலந்துவிட்டுள்ளனர்.

இந்த கழிவுநீர்தான் நமக்கு உணவளிக்கும் டெல்டா பாசனத்திற்கு வருகிறது!! எப்போதெல்லாம் ஆற்றில் வெள்ளம் வருகிறதோ அப்போதெல்லாம் வளர்ந்த முதலாளிகள் கழிவுநீர் திறப்பதை அரசு லஞ்சதொகை வாங்கி கண்டுகொள்வதில்லை..

கடந்த மாதம் தேனி கும்பகரை அருவியில் 15 நாட்களாக குளிக்கதடை விதிக்குமளவு கனமழை பெய்தது, அந்த நீரில் ஆபத்தான கொடைக்கானல் பாதரச கழிவுநீர் கலக்கபட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை,..

தற்போது கோவைகுற்றாலத்தில் 10வது நாளாக குளிக்க தடை, இந்த வெள்ள நீர் திருப்பூர் வழியாக காவிரி ஆற்றில் கலந்து திருச்சி வருகிறது!!

உங்கள் அக்கறையின்மை காரணமாக எங்கள் தலைமுறை வீடுகள் கட்ட தரமான மணலை இழந்தது, இனி கழிவுநீர் கலப்பால் சுத்தமான நிலத்தடிநீரும் கிடைக்காமல் குழந்தையின்மை ஏற்படும்,

இது போதாதென  பருவமழையை தரும் மேற்கு தொடர்ச்சி மழையையும் வெட்ட உள்ளனர்.. தற்போது குமரி முனையில் துவங்கிவிட்டனர்..

சிலரின் லஞ்ச ஊழல், சிலரின் அலட்சிய பேராசை, பலரின்  ஆடம்பர பண தேடல் ஓட்டத்தால் நாங்கள் எதிர்காலத்தில் ஆரக்கியமான நீர் உணவு காற்று இல்லாமல் உங்கள் கண் முன்னே பலர் நோய்களால் சாக உள்ளனர்..

பக்கதுமாநிலங்களெல்லாம் சிறு ஓடைகளை கூட தாய்பாலுக்கு நிகறாக பராமரிக்க நாமோ பாரதியார் புகழ்ந்து பாடிய காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய பெரும் தாய்பால் ஆறுகள் நம் முன்னே கொடூரமாக கற்பழிக்கபடுவதை வேடிக்கை மட்டுமே பார்த்துவருகிறோம்..

கடைசியாக... கடல் உயிரினங்கள் 90% 2020குள் மடியப்போவதாக ஆய்வுகள் சொல்கின்றன!  காரணம் தெரியுமா???

நாம் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில்கொட்டி கடலில் கலந்து, அதை கடல்வாழ் உயிரினங்கள் உண்டதால்தான்..  இதற்கு யார் பொறுப்பேற்பது,,  மேலும் மேலும் 6அறிவு பெருகியும் தவறு செய்கிறீர்கள்..

அதன் பாவங்கள் எங்களை நோக்கிதான் வந்துகொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.