04/06/2018

பொதுவாக கல்யாண வீடுகளில் திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்திய பிறகு வெளியேறும் நபர்களுக்கு தேங்காயை தாம்பூலமாக தரும் காரணம் அறிவீர்களா?


இரண்டு காரணம்...

1. தேங்காய் - இங்கு தேங்காதே.. வந்த வேலை முடிந்தது. கிளம்பிச்செல். சொல்லாமல் சொல்லும் வழி...

2. நெடும் பயணம் நடந்து போகும் போது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து + நீர் இரண்டும் உள்ள உணவுப்பொருள்!

பொதுவாக கேட்ட காரியங்களுக்கு தாம்பூலம் கொடுக்கப் படுவதில்லை .

தாம்ப்பூலத்தை கையில் சுமந்து வரும் பொது இவர்கள் நல்ல காரியத்திற்கு சென்று வருகிறார்கள் அறியும் வண்ணம் தாம்பூலம் வழங்கப்படுகிறது.

ஏன் தேங்காய் தரப்படுகிறது எனில் தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.

திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்" என சொல்லப்படுகிறது.

ஆனால் போக்குவரத்திற்கு வாகனங்கள் இல்லாத காலகட்டத்தில் நடை பயண தூரம் அதிகமாக இருக்கும்.

தேங்காய் கொடுத்து அணிப்பினால் தேங்காயும் அதில் உள்ள நீரும் உணவாக அமையும்.

உபாதைகள் இல்லாத சுத்தமான நீர் மற்றும் தேங்காயை மென்று தின்னும் பொது அதில் உள்ள நார்சத்து செரிமானத்தை தரும். என்னும் நல் நோக்கத்திற்காகவே முன்னைய காலத்தில் தாம்பூலப்பை கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றோ ஞாபகார்த்த பரிசுப்பை என்ற பெயரில் மக்களின் அன்றாடத் தேவைகளிற்கு பிரயோசனமற்ற பொருட்களைக் கொடுப்பதால் வீடுகளில் அவை குப்பையாக தெங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.