15/07/2018

உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி...


பல்லிகளை நீங்கள் சாதாரணமாக அறிவீர்கள். ஆனால் நாம் இங்கு அறிமுகப்படுத்தப் போகின்ற பல்லி இனம் நீங்கள் காண்கின்ற பல்லிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது.

ஆர்மடில்லோ பல்லி என்பது இதன் பெயர்.

தென்னாபிரிக்க பாலைவனங்களில் வாழ்கின்றது. சுற்றி வளைக்க கூடிய வாலை உடையது.

ஆர்மடில்லோ பல்லி குஞ்சுகள் 6 முதல் 8.5 அங்குலம் வரை இருக்கும். இவ்வகை பல்லிகளின் நடத்தைகள் மிகவும் வித்தியாசமானவை.

உதாரணமாக கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 60 பல்லிகள் வரை இருக்கும். பெண் பல்லிகள் குஞ்சு ஈனும். முட்டை இடாமல் குஞ்சு ஈனுகின்ற ஒரே ஒரு பல்லி இனம் இது தான்.

ஆனால் இப்பல்லி இனத்தின் தற்காப்பு நடவடிக்கைதான் விசித்திரமான நடத்தைகளில் குறிப்பிடத்தக்கது.

ஏதேனும் ஒரு ஆபத்து நேர இருக்கின்றது என உணர்கின்றபோது வாலை வளைத்து வாய்க்குள் கொண்டு வந்து பந்து போல சுருண்டு விடும்.

வாலில் உள்ள செதில்கள், கூர்முனைகள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு கவசம் மாதிரியான ஏற்பாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.