1975 -ல் நம்பியார் நடித்து வெளிவந்த "சாமி ஐயப்பன்" என்னும் திரைப்படத்துக்கு பிறகு அடுத்த 15 ஆண்டுகளில் இது போன்ற நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்திப்படங்கள் சரசரவென வெளிவந்தது.
ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து முன்னணிக் கதாப்பாத்திரங்களுமே ஐயப்ப பக்திப்படங்களில் நடித்தனர். ஒரு சாதாரண பக்திப்படத்துக்காக ஒரே திரைப்படத்தில் 20 -க்கும் மேற்ப்பட்ட கதாநாயகர், கதாநாயகிகள் எப்படி நடிக்க வைத்தார்கள் என்பதே அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
1990 -களுக்குப்பிறகுதான் ஐயப்பன் கோயில்களுக்கு மாலைபோடும் வழக்கம் தமிழகத்து நகரங்களில் பரவலாக துளிர்விடத்தொடங்கியது.
அதுவரை கிராமப்புறங்களில் இவ்வழக்கம் எட்டிப்பார்த்தது கூட கிடையாது. முருகு சமாதிகளில் பாதயாத்திரை செல்லும் வழக்கம் தமிழர்களிடையே இருந்திருக்கிறது. ஆனால் சபரிமலை யாத்திரை என்பது தமிழர்களிடையே முன்பு இருந்தில்லை.
முழுக்க முழுக்க திரைப்படங்களிலேயே உருவாக்கி, வளர்த்தெடுத்து பரப்பப்பட்ட ஒரு ஆரிய வழிபாடுதான் இந்த ஆரியங்காவு ஐயப்பன்.
இந்த திடீர் வழிபாட்டு முறையின் பின்னால் ஒளிந்திருப்பது பழைய ஆசீவக சமண முறையே என்பதில் ஐயமில்லை. முதன்முறையாக மாலைபோடுபவர்கள் (அதாவது ஆசீவக மாணவராக சேருபவர்கள்) முதல் 3 ஆண்டுகள் கருப்பு உடை அணியவேண்டும்.
பிறகு அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு முறையே 6 வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணியவேண்டும். ஆகமொத்தம் 18 ஆண்டுகள். கடைசி 3 ஆண்டுகள் வெள்ளைநிற ஆடை அணியவேண்டும். அவர்கள் தான் குருசாமிகள் ஆகமுடியும்.
புத்தத் துறவிகளின் கராத்தே தற்காப்புக் கலையில் இம்முறை அப்படியே தலைகீழாய் வரும்.
வெள்ளை நிறத்தில் தொடங்கி (Black Belt) கருப்பு நிறத்தில் முடியும். இதைச் செய்ததும் ஆசீவக சமணமே.
இதில் நுணுகி ஆராய்ந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். ஆசீவகம் தமிழகத்தைத் தவிர கிழக்காசியாவின் அனைத்துப் பகுதிகளிலுமே தனது நிறக்கோட்பாடை வெள்ளையில் இருந்து கருப்பை நோக்கியே பயன்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே கருப்பிலிருந்து வெள்ளையை நோக்கித் தலைகீழாய் திருப்பியிருக்கிறது.
முழு ஆண்மையை வெளிக்கொண்டு வரும் கராத்தே கலையின் வண்ணப்படிநிலைகளை (White Color to Black Color) தலைகீழாய் திருப்பினால் அது ஆண்மையைச் செயலிழக்கச் செய்யும் உத்தியாய் மாறும்.
இதன் படி 18 ஆண்டுகள் கல்வி பயிலும் ஆசீவக மாணவன் முடிவில் ஞானம் என்ற பெயரால் முழு அலியாக மாற்றப்படுவான். காதல், வீரம், இல்லறம் என ஏதுமற்று ஆண்மையிழந்து போவான். சென்ற வருடம் கார்ப்பரேட் சாமியார் “இரவிசங்கர்ஜி” என்பவன் தனது பேட்டியின் போது “ஐயப்பன் என்பவன் ஒரு அலிதான்” என்று திரும்பத் திரும்ப கூறியதை நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்.
இந்த அலிகள் மயமாக்கும் திட்டம் என்பது தமிழக ஆண்களுக்கான சிறப்புத் திட்டம். இதனை எதிர்த்து தமிழ் மண்ணின் தென்பாண்டிநாட்டு அறிவர்களால் உருவாக்கப்பட்டதே “இசுலாம்” என்னும் கருத்தியலாகும்.
அறிவை விரும்பும் ஒருவன் அதனைத் தன் தந்தையிடமிருந்து மட்டுமே கற்க வேண்டும். அல்லது அவனது இரத்த உறவுகளிடம் கற்பதுவே நலம்பயக்கும்.
அதனன்றி எவன் ஒருவன் தான் அறிவைக் கற்றுத் தருவதாகக் கூறி வெளியிலிருந்து உன்னிடம் வருகிறானோ? அவனே உன்னை வீழ்த்த வந்த உனது எதிரியாவான். அதிக அறிவு ஆபத்தையே விளைவிக்கும்.
இப்பாடத்தை தமிழினம் நன்றாகவே கற்றிருக்கிறது. காலங்கடந்து இது நமக்குப் புரிந்திருந்திருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.