25/08/2018

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு...


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர்.

அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும்.

இதற்கு உதவும் மூலிகைகள்...

1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.

இதில் மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.

பெண்களை அழைப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.

அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.

துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.

தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.

அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல்.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும்.

இதில் மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.

எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.

உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.

நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.

கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.

பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி.

பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல்.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி.

மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை.

பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி.

துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை.

எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி.

பெண்களை பேதிக்க - புடலங்கொடி.

வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3.சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்.

வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை.

கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி.

மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள்...

1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.

பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை.

பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்.

உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை.

விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு.

தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை.

அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது.

மனிதர்களை மோகிக்க - கிராம்பு.

எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல்.

இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்.

பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை.

லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு.

ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி.

விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி.

தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி.

சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.

அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்.

தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி.

பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை.

பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி.

எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி.

உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல்.

இதற்க்கு பயன்படும் மூலிகைகள்...

1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி.

தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி.

பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி.

வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை.

கற்களை கறைக்க - நத்தைச்சூரி.

செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை.

திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு.

கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.