காவிரி கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்ததும், கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் விட வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்ததும், மதகுகள் உடைகின்றன.
தண்ணீரை கடலுக்கு கொடுப்போமே தவிர விவசாயத்திற்கு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன் அரசு செயல்படுகிறது.
ஒன்று மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு ஊரை காலி செய்துவிட்டு கூலி வேலைக்கு நகரங்களுக்கு செல்ல வேண்டும்.
அல்லது குறைந்தபட்சம் வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேறக்கூடாது என்றால், குடிப்பதற்காகவது மக்கள் போராட வேண்டும்.
பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்பட்டு பெரும் போராட்டத்தை கட்டமைக்க வேண்டிய காலக்கட்டம் இது.
தவறினால் எத்தனை டிஎம்சி தண்ணீரை இயற்கை வழங்கினாலும், காவிரி டெல்டா பாலைவனமாகப் போவது உறுதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.