நம்ம தலைவர் ஏற்கனவே விதைச்ச
தமிழீழக் கருத்தியலை பின்பற்றினாலே
எப்பவோ நமக்கான அரசியல் மாற்றமும் வந்திருக்கும், ஆனா இத்தனை காலம் வரை திராவிட, ஆரிய சூழ்ச்சியில
நம்மள சிக்க வெச்சு, தமிழ் தேசியம்னு ஒரு தற்சார்பு அரசியலை பேசத்
தொடங்கி அது பிரபலமாகாத நிலையில
சமூக வளைதளங்களில் திராவிட
கட்சிகள் கொடிகட்டிப்பறக்க, சில
தமிழ் தேசியவாதிகளால அவங்க மூக்கு உடைப்பட்டு இன்னைக்கு அவனுங்க
பேரை சொன்னாலே கலாய்க்கிற அளவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கு..
ஆனா யார்யார்லாம் உண்மையா தமிழ் தேசியம் பேசுனாங்களோ
அவங்களாம் இருக்குற இடம் தெரியாம சில காலத்துல காணாம
போயிடுறாங்க, இந்த கருத்தியலையும் இனி முடக்க முடியாது, ஆனா விளம்பரப்படுத்துனா வியாபாரமாக்கலாம்.. முதல் பாணி முடியாத காரணத்தால், ஆளும் வர்க்கம் ரெண்டாவது பாணியை தேர்ந்தெடுக்குது..
இதே பாணியாகக் கொண்டு தமிழ் தேசியம், தற்சார்பு அரசியல் பேசி இன்னைக்கு வீரசைவம், வீரவைணவம்னு சில பூசல்களோட
வெள்ளாள தேசியமா மாத்தப் பாக்குறானுங்க, இடையில திருமுருகன் காந்தியின் ஈயம் பூசியும் பூசாத
திராவிடம் கலந்த தமிழ் தேசியமாம்.
ஒரு கருத்தியலை சிதைச்சி வணிகமாக்க எத்தனை முயற்சிடா ?
நம்மாளுங்க முன்னால இயற்கை வேளாண்மை, உணவுகள் பத்தி பேசுறப்போ கலாய்ச்ச நாகரிக சமூகம், இப்போ ஆர்கானிக் தரமானது னு
விளம்பரப்படுத்தப்படும் போலியை வணிகத்தின் பேர்ல வாங்குறானுங்க ஆக..
கடைசி வரை நீங்க தற்சார்பு வழியில இறங்கிடக் கூடாதுனு சோம்பேறித்தன
முடிவுல இருக்கீங்க போல..
மரபு வழி இயற்கை மருத்துவமும் இதே வழி தான்..
நீங்க யாரையும் முழுசா நம்பாதீங்க, அதுவும் ஊடகங்களால
பிரபலப்படுத்தப்படுறவனை பார்த்து..
1. நாளை ஹீலர் பாஸ்கர் திசையும் மாறலாம்.
2. பகைவன் வழி போகலேனா, ஒரு சில பொம்மையை வெச்சு மக்களை
பேச்சால ஈர்த்து, இதே மரபு வழி மருத்துவம், தவறான வழியில
செயல்படுத்தப்பட்டு, வணிகமயமும் ஆக்கப்படலாம்.
"மனிதர்களை நம்பாதீர்கள், மனிதர்களை சந்தேகிக்காதீர்கள்"
- ம. செந்தமிழன்
நீங்களா யாரையும் நம்பாம தற்சார்புக்கு அடித்தளம் போடுறதே சிறந்த தீர்வு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.