தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!
பொருள்:
தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.