மதுரை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர், அப்பன் திருப்பதி போலீசார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய எச்.ராஜா, அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்கள் குடும்ப பெண்களையும் தரக்குறைவாக பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வரும் 27ம் தேதி சென்னையில் அவர்கள் உண்ணா விரதம் இருக்க உள்ளனர்.
இந்த நிலையில், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மாரிமுத்து புகாரின் பேரில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது ஐந்து பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
காவல்துறை துணை ஆணையரே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல காவல் நிலையங்களிலும் எச்.ராஜா மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.