தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.....
கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.
சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், “உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது.
வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.
இது உண்மையா இல்லை போலியா விசாரணைக்கு பிறகே தெரியவரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.