பிண்டத்தில் உள்ள ஒவ்வொரு செல்களுக்காக பிணடம் தனது இயங்குதலை தன்னை இயக்கும் அதே போல நமது யாக்கையில் உள்ள செல்களும் பிண்டத்தின் இயங்குதலுக்காக இயங்கும்.
இது நடக்க ஒன்றே ஒன்று தான் தேவை இரண்டும் தேவைகளை அதனிடம் கேட்கும்படி கேட்டால்...
இதே தான் இந்த அண்டதின் இயங்குதலுக்குள்ளும். பிரபஞ்சம் சக்திக்கு நாம் அடிமை நமக்கு அது அடிமை. கேட்டா தரும்.. கேட்டத குடுக்கவும் செய்யனும். சும்மா ஒரு intro காக பழைய விசயத்தையும் சேர்த்து சொல்கிறேன்.. law of attraction...
முளைப்பாரி பயிர்களை விதைப்பதற்கு முன் இதை செய்து பார்த்து அந்த வருடத்திற்கு விவசாயத்திற்கு மழை கிடைக்குமா என்று பார்க்கும் சோதனை என்றும் சிலர் சொல்றாங்க. இன்னும் சிலர் மழை வேண்டி ஒரு வழிபாடுனும் சொல்றாங்க. சரி எப்படியோ இருக்கட்டும் இது எப்படி இயங்குதுனு பாப்போம்.
திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் எந்த கோவில் தெய்வதற்கு முளைப்பாரி பயிர் போடபோறாங்களோ அந்த தெய்வத்தை வணங்கி முளைப்பாரியில் நவதானியங்கள் கொண்டு விதைப்பார்.
ஒருவர் அப்போது தெய்வத்திடம் வேண்டி தனது மக்களுக்கு மழைவேண்டுமென்று வேண்டிக்கொண்டே விதைக்கும் விதைத்தால் அந்த விதையில் அந்த எண்ண அதிர்வுகள் தொற்றும் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு வெளியில் எடுப்பார்கள்.
அந்த முளைப்பாரியை திருவிழாவிற்கு எடுப்பதற்கு ஒருவாரம் விரதம் இருந்து தூய்மையான எண்ணங்களை ஒரு வாரம் சுமந்தவர்கள் அந்த பயிரை சுற்றி கும்மியடிப்பார்கள் திருவிழாவின் போது..
அப்போது கும்மியடிக்கும் ஆட்கள் எல்லோரும் வானத்தை பார்த்து மழையை வேண்டியும் அந்த பயிர்களை எப்படி விதைத்தோம் தெய்வதை வணங்க தாங்கள் எடுத்த விரதம் பற்றியும் அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்றும் மக்களின் தேவைகளையும் பாடிக்கொண்டே கைகளை தட்டி அந்த எண்ணங்களை அதிர்வுகளாக உருவாக்குவார்கள் , பிறகு பயிர்களை நோக்கியும் தட்டுவார்கள்.
இதில் கவனிக்க கூடிய விசயம் என்னவென்றால் எல்லோரோட எண்ணக்களும் சரியாக இருக்காது ஒரே நேரத்தில் என முதலில் அந்த பாடலை ஒருவர் பாட பின்னாலே மற்ற எல்லோரும் ஒன்று போல பாடிக்கொண்டே அந்த எண்ணங்களை அதிர்வுகளாக அதிக ஆட்களின் உதவியோடு அடர்த்தியாக பிரபஞ்சத்தில் விதைக்கிறார்கள்.
அதிர்வுகளை அதே போல பயிர்களிலும் அதாவது ஒரு வாரமேயான பயிர் இதை பசுமரத்துல ஆணி அடிப்பதுபோல.
பெரிய மரங்களில் எண்ணக்களை விதைத்து நமது இயங்குதலுக்கு இயக்குவது கடினம் ஆனால் இதுவோ குழந்தை போல இருந்தால் சுலபம் காரி குழந்தைக்கள் அதிகமாக சிந்திக்காது அதற்கு தேவையும் இல்லை.
(அதோட core dna வோட இதை இணைப்பது போல ! அதாவுது குழந்தை பெரிய பையனா வந்து எப்படி ஆகனும்னு சொல்லி சொல்லி வளர்ப்பது போல )
எனவே எண்ண அதிர்வலைகளை சுலபமாக உள்வாங்கி அதோட இயங்குதலும் இயக்கும் மக்களின் வேண்டுதலுகளை உள்வாங்கி பிரபஞ்சத்தோட இணைக்கும் இதுவும் மழையை பூமியில் கொண்டுவர உதவுகிறது கூடவே இவர்கள் வானத்தை நோக்கி அடித்து உருவாக்கிய ஒலி அதிர்வுகளும்..
திருவிழா முடிந்ததும் இதை ஆற்றில் கரைத்தாலும் கரை ஒதுங்கி வளர்ந்தால் அந்த பயிற்களின் வழியாக விதைத்த எண்ணக்கள் பிரபஞ்சத்தோட இணைந்தே ஒலிக்கும்.
பசிக்குதுனு சாப்பாடு கேட்டால் பிரபஞ்சம் தரும் ஆனால் அது எப்படி பட்ட சாப்பாடா இருக்கனும்னு நீதான் கேட்கனும் அவ்வளவு detail uh கேட்கனும் அந்த detail கும்மி பாட்டில் இருக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.