உண்ணாநிலை இருந்து உயிர் நீத்த ஈகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையோடு சேர்த்து 12 கோரிக்கைகளை முன் வைத்தார்.
அன்றைய ஆளும் பேராயக் கட்சி ஒரு கோரிக்கையைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் அவரைச் சாகும்படிச் செய்தது.
12 கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேறிய போதிலும், ஏனைய கோரிக்கைகள் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற வில்லை.
அக் கோரிக்கைகள் பின் வருமாறு...
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.