15/10/2018

கலப்பு திருமணம்: முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?


தமிழ் சமூகத்தில் சாதி:

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள். உதாரணம்:

கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில் இல்லை. -- பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி,கோவை

கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு. இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை, பின்னணி, நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல்,கொலை) இல்லை.

ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது. அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல. உதாரணம்:

வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன. வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது. இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்? இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே? ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.? மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக, மதிமுக, தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி காட்சிகளுக்கு அங்கு என்ன வேலை? மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன. பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர். இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே? வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும்,எழுதியும் வருகின்றனர். அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்.

திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது. கள்ளர்களின் விழாவான 'பெருங்காமநல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம். இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும். பொன்,மண்,பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள். இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.  'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' குயுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. --- இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். ஆனால் உடும்பு பிடிக இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

கீழ் சாதி ஆண் என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன்" என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்

நபர் - சாதி - இனம் :

பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால், மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரைசியல் தூண்கள். மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும், தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர,தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள். அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான். இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும். யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான்.

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர்,தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான். எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்). இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்..

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்...

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர்,கவுண்டர்,பறையர்,கோனார்,முக்குலத்தோர் etc ...).

2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர்,நாயுடு,கன்னட பிராமின்,சக்கிலியர்,சின்ன மேளம்(இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை, கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்.

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும். பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும். திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.

சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது..

ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்.

எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்.

அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்.

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக, பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்)

செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம். இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.

கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்...

தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

இல்லை இல்லை. கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும் என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும்,வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர், பறையர், வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம். பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம். இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி,'கலப்பு திருமண பிரச்சாரத்தை'  செய்து,செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு..

காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு...

காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.