மிளகாய் சாகுபடி செய்த 20 நாட்களுக்கு மேல் இலைகள் துளிர் விட ஆரம்பித்தவுடன் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி முதலியவை தாக்க ஆரம்பிக்கும்.
முதலில் மிளகாய் நடவு செய்வதற்கு முன்பு மண்பரிசோதனை செய்து தேவையான அளவு உரத்தைமட்டு கொடுக்க வேண்டும்.
தழைச்சத்து உரம் அதிகமாக கொடுக்காமல் 10 கிலோ உரம் போட வேண்டும் என்றால் 2 கிலோவை குறைத்து 8 கிலோதான் கொடுக்கனும் (தழைச்சத்து உரத்தை கொஞ்சம் குறைத்து தரவேண்டும்).
பூச்சிதாக்குதலை குறைக்க ஊடுபயிராக மிளகாய் நாற்று 10 வரிசையும் ஒரு வரிசை மக்காச்சோளமும் நடவு செய்ய வேண்டும்.
வரப்பு ஓரங்களிலும் மக்காச்சோளம் நடவு செய்தால் பக்கத்து வயலில் உள்ள பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராமல் தடுக்கலாம்.
மிளகாய் சாகுபடியில் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மஞ்சள் நிறப்பொறி 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10-15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும் தொடர்ந்து தெளித்து பூச்சி வருமுன் பயிரை காக்கலாம்
இலைப்பேனின் தாக்குதல் மினகாயில் அதிகமாக இருக்கும்.
இவற்றை இரசாயன முறையில் கட்டுப்படுத்த புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது அபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி தெளிக்க வேண்டும் சாறுறிஞ்சும் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.